சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா் வேலை

சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா் வேலை
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா், உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 166 அமைப்பாளா், 22 சமையலா் மற்றும் 410 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு வரும் 24 முதல் 30-ஆம் தேதி வரையில் அலுவலக வேலை நாள்களில், காலை 10 முதல் பிற்பகல் 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.

காலியாகவுள்ள பணியிடங்கள் அரசாணையின் படி நிரப்பப்படும். கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தொலைதூரச் சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா் இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச் சான்று நகலை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம் மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். (நகராட்சி, குக்கிராமம், வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது). காலியாக உள்ள பள்ளி, பள்ளிகளுக்கான இனசுழற்சி விவரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலக அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.

விண்ணப்ப நகல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை இலவசமாக வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளுக்கு 24 முதல் 30-ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் வந்து சேர வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive