ART COLLEGE ADMISSION : அரசு கல்லூரிகளில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 20% இடங்களை நிரப்புவதில் சிக்கல் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் தாமதம்
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதலாக கிடைத்துள்ள 20 சதவீத இடங்களை நிரப்புவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், தேவை உள்ள கலை பாடப் பிரிவு களுக்கு 20 சதவீதமும், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறிவியல் பாடப் பிரிவு களுக்கு 20 சதவீதமும் கூடுதல் இடங்கள் வழங்க அனுமதி அளிக்கப் பட்டது. ஆனால், இந்த கூடுதல் இடங்களை நிரப்புவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அரசுக் கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:
அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களுக்கு அரசு அனு மதி அளித்ததால் சுமார் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் இடங்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன.
முதல் சுற்றில் இடம் கிடைக்கா தவர்களுக்கு 2-வது சுற்றில் இடம் வழங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுமதி அளித்தாலும், அதற்கான தெளிவான வழிகாட்டுதல் இல்லை. அதேபோல, தரவரிசை மதிப்பெண், இட ஒதுக்கீட்டில் சமமாக இருப்பவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதிலும் தெளிவான நெறிமுறை இல்லை. இந்நிலையில், கூடுதலாக கிடைத் துள்ள 20 சதவீத இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment