16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு

16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு
நேபாளம், பூட்டான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் என பார்லி.,யில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வியெழுப்பப்பட்டது. 

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்த பதில்: 

சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய குடிமக்கள் பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேஷியா, மியன்மர் உள்ளிட்ட 43 நாடுகள் விசா-ஆன்-வருகை வசதியை வழங்குகிறது.

இலங்கை, நியூசிலாந்து , மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்தியப் பயணிகளுக்கு இ-விசா வசதியும் வழங்கப்படுகிறது. இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா-வருகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive