அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி
ஜார்க்கண்ட் மாநிலக் கல்விஅமைப்பைச் சீரமைக்கும் பணிகளில்அம்மாநில பள்ளிக் கல்வித்துறைதீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன்ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில்படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கவேலை என்ற சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று ஜார்க்கண்ட மாநிலபள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோநேற்று பேசினார்.

இதுகுறித்து அவர்கூறியதாவது:"அரசுப் பள்ளிகளில்படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்கவேலை கொடுக்கப்பட்ட வேண்டும்என்பதே என்னுடைய நிலைப்பாடு. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டுஅரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில்நியாயம் இல்லை. அரசாங்க வேலைவேண்டுமென நினைத்தால் அரசுப்பள்ளியில்தான் படிக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்விஅமைப்பை மேம்படுத்த இதுபோன்றகறாரான நடவடிக்கைகள் அவசியம். இருப்பினும் பொதுமக்களின் கருத்துக்கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகேஇந்தத் திட்டத்தைச்சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்படும். ஆசிரியர்களுக்குக் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு இதரபணிகள் ஒப்படைக்கப்படுவதைத்தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால்கற்பித்தல் பணியில் ஆசிரியர்களால்திறம்பட ஈடுபட்டு மாணவர்களுக்குத்தரமான கல்வியைப் போதிக்க முடியும்.

அரசுப் பள்ளிகளில் படித்து வரும்ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம்வரை மாதந்தோறும் அரசாங்கம்செலவழித்து வருகிறது. ஆனாலும்சாரைசாரையாகத் தனியார்பள்ளிகளை நோக்கியே மக்கள்படையெடுக்கிறார்கள். இந்நிலையைமாற்றி அதிக எண்ணிக்கையிலானபெற்றோர், தங்களுடையகுழந்தைகளை அரசுப் பள்ளிகளில்சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின்தரம் உயர்த்தப்பட வேண்டும்."

இவ்வாறு அமைச்சர் ஜகர்நாத் மதோதெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive