பள்ளிகள் திறக்கும்முன் குழு அமைத்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன்!
பள்ளிகளுக்கு வழங்க 80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகளுக்கு வழங்க 80% சதவீத பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
0 Comments:
Post a Comment