மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயாரிக்க ஏதுவாக இணைப்பில் கண்டுள்ள பட்டியலில் உள்ள , அரசு உயர்நிலை / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை , 12 . 05 . 2020 - க்குள் மறு நினைவூட்டிற்கு இடமின்றி இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
1 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ?
2 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு , இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா ?
3 . சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா ?
4 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம்
5 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில் / நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் அலுவலகம்
6 . சார்ந்த தலைமையாசிரியர்களின் நாளது தேதி வரையிலான அசல் மந்தண அறிக்கைகள் ( ஏற்கனவே மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பின் மீதமுள்ள காலத்திற்கான மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட வேண்டும் )
Download Proceedings ...