Smart Techno Teachers Team - ஆசிரியர் குழு மூலமாக இணையவழி இலவச கணினி பயிற்சி!

Smart Techno Teachers Team - ஆசிரியர் குழு மூலமாக இணையவழி இலவச கணினி பயிற்சி!

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்களுக்கு தற்பொழுது இணையவழி இலவச கணினி பயிற்சி S3T (Smart Techno Teachers Team) ஆசிரியர் குழு மூலம் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பு தினமும் 1.30 மணி நேரம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி முதல் வீடியோ உருவாக்கம், இணையவழி மதிப்பீடு செய்தல் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான இணைய மற்றும் ஆன்ட்ராய்டு பயன்பாடுகள் சார்ந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.தினமும் நடைபெறும் வகுப்பினை ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள https://s3t.in/இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மேலும் இணையவழிப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியினை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி ஆசிரியர் மாதவலாயம் அரசு மேல் நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் எஸ். சுரேந்திரன் அளித்து வருகிறார்.

முகக்கவசம், மருந்துகளை வீட்டிலிருந்தே பெற 'போஸ்ட் இன்ஃபோ' செயலி: அஞ்சல்துறை புதிய முயற்சி

முகக்கவசம், மருந்துகளை வீட்டிலிருந்தே பெற 'போஸ்ட் இன்ஃபோ' செயலி: அஞ்சல்துறை புதிய முயற்சி
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அஞ்சல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே கொரோனாவின் வீரியம் குறையாத காரணத்தினால் மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிதும் ஏழை எளிய பாமரமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் பெயர் 'போஸ்ட் இன்ஃபோ'. இதனைப் பதிவிறக்கம் செய்த பின்பு தேவையான கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின்னர், கோரிக்கையின் நிலையை அறிய பயனருக்கு ஒரு தனித்துவமான குறிப்பு எண் உருவாக்கப்படும். அதன் பின்னர் மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்படும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான இச்செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மூத்த அலுவலர் கூறியதாவது;கொரோனா ஊரடங்கு காரணமாக எங்களுடைய சேவைகளில் எவ்விதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. எங்கள் ஊழியர்கள் இந்த மன அழுத்த சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். வழக்கமான சேவைகளைத் தவிர, மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு தேவையான மருந்துகள், முகக்கவசங்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெற்று கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மே 3 முதல் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மே 3 முதல் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மே 3ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தின.இதையடுத்து கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 14ம்தேதி காலை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

இந்நிலையில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. ஆகையால் மே 3ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் சில  மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை அடுத்து வரும் நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அவை மே 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஏற்கனவே உள்ள ஊரடங்கு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் உருவாக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப புதிய இணையதளம் உருவாக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.  இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்த உத்தரவில், ஊரடங்கால் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்   சிக்கியுள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அவர்களை உரிய அறிவுறுத்தல்களுடன் சொந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்கள் மற்றும் அவர்களது சொந்த மாநிலங்கள் என இரு மாநில அரசுகளும் பரஸ்பர ஒப்புதலுடனேயே சாலை   மார்க்கமாக அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை உரிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். வைரஸ் அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும். குழுக்களாக செல்வதற்கு பேருந்துகளை பயன்படுத்தலாம்.   பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

அதேபோல், இருக்கையில் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்   கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை கவனிக்க அந்தந்த மாநில அரசுகள் உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இடம் பெற்ற நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே,   வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல பல மாநிலங்கள் சிறப்பு ரயில்கள் இயக்ககோரி மத்திய அரசிடம் கோரியுள்ளன. இதற்காக ஒரு நாளைக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே  அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் உள்ள தமிழக மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வர புதிய இணைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காகதேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்குத்
திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள்
nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax : 2020-21 வருமான வரி திட்டமிடலின் அவசியம்

Income Tax : 2020-21 வருமான வரி திட்டமிடலின் அவசியம்




2020-2021  ஆண்டிற்கான  வருமான வரி படிவம் தற்போது தயார் செய்து அதற்கேற்ப வருமான வரி பிடித்தம் செய்ய திட்டமிட்டுக் கொள்ளலாம்.ஏனென்றால் ஜனவரி மாதம், ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு பெற்றவர்களும் மற்றும் ஜூலை மாதம் அக்டோபர் மாதம் ஊதிய உயர்வை பெற இருப்பவர்களும் ஊதியத்தை  கணக்கிட்டு கொள்ள வேண்டும்.


அக விலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பயன் இல்லாதால் வருமான வரி படிவத்தை தற்போதே பூர்த்தி செய்து திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

ஊதியத்தில் 50% அல்லது 30% வெட்டு இருக்குமா? என்பதும் தெரியவில்லை என்பதால், வருமான வரியை அளவாக பிடித்தம் செய்வது நல்லது.

ஏனென்றால் இந்த வருடம் பெரும்பாலானோருக்கு,  30% வரி, 20 % வரி கடந்த ஆண்டை விட குறைவாகவே வரும் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.



சிலருக்கு இந்த வருடம் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட முறையில் கணக்கீடு செய்தால், வருமான வரி கணிசமாகக் குறையலாம்.

உதாரணமாக ரூ 75,900 அடிப்படை ஊதியம் ( ஆண்டு ஊதிய உயர்வு ஜுலை) பெறுபவருக்கு,

பழைய முறையில் வருமான வரி (4% Sur Charge உட்பட)

ரூ 1,05,636

ஆனால் புதிய முறையில் வருமான வரி ரு 69,477 மட்டுமே.



அகவிலைப்படி மற்றும் சரண்டர் இல்லாததால், ஆண்டு மொத்த ஊதியமே, எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே வருவதால், சிலருக்கு வரியே வராமலும் இருக்க வாய்ப்புண்டு.

ஆகவே திட்டமிட்டு செயல்படுவீர்!

கொரோனா முழு அடைப்பினால், அரசின் வருவாயில் பெருமளவு பாதிப்பு இருப்பதால், ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் வெட்டு வந்தாலும் அல்லது வருமான வரியில் சில மாற்றங்கள் வந்தாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

Sbi வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்

Sbi வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அவசர கடன்

State Bank Of India: குறுஞ்செய்தியிலேயே நீங்கள் இந்த வகை கடனை பெற தகுதியானவரா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். தகுதியான வாடிக்கையாளர்கள் கடனை 4 steps...




SBI Updates: உலகளாவிய தொற்றான கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக மக்களின் நிதி நிலைமை மிகவும் பாதிப்படைந்துள்ளது மேலும் பலவிதமான கஷ்டங்களையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். 

பல நிறுவனங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன மேலும் வணிகத்தை மூடியுள்ளதால் சிறு வியாபாரிகளின் நிலைமை மோசமடைய துவங்கியுள்ளது. இதை மனதில் வைத்து பாரத ஸ்டேட் வங்கி குறைந்த வட்டியில் அவசர கடனை சிறு வியாபாரிகளுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் தவனையை ஆறு மாதங்களுக்கு கட்ட வேண்டாம் என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறைந்த வட்டியில் எஸ்பிஐ அவசர கடன்

கடனை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. கடன் தேவைப்படுவோர் வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் அதை பெற்றுக் கொள்ளலாம். மேலும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களிடம் Yono App ஐ பதிவிறக்கம் செய்து அதிலுள்ள சிறந்த நன்மைகளை பெறலாம் எனக் கூறியுள்ளது. தவனை கட்டுவது ஆறு மாதத்துக்கு பிறகு துவங்கும் மேலும் அது 7.25 சதவிகிதம் வட்டி என்ற அளவில் இருக்கும். இது எல்லா வகைக் கடன்களிலும் மிகவும் குறைந்த வட்டி விகிதம் என எஸ்பிஐ கூறியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தனிநபர் கடனை வெறும் 4 சொடுக்குகளில் பெறலாம்.



முன் ஒப்புதல் பெற்ற தனிநபர் கடனை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வெறும் 4 சொடுக்குகளில் பெறலாம் என மூத்த வங்கி பணியாளரான ராஜேந்திர அவஸ்தி கூறியுள்ளார். கடனுக்கான விண்ணப்பத்தை 7 நாட்களும் 24 மணி நேரமும் விண்ணப்பிக்கலாம். 

அவசர கடனைப் பெற வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL < வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் (last 4 digits of account number) > என தட்டச்சு செய்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். குறுஞ்செய்தியிலேயே நீங்கள் இந்த வகை கடனை பெற தகுதியானவரா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். தகுதியான வாடிக்கையாளர்கள் கடனை 4 steps களில் பெறுவார்கள்.

எஸ்பிஐ அவசர கடனை வாடிக்கையாளர்கள் எவ்வாறு உடனடியாகப் பெறமுடியும்.



முதல் படி (step) – State Bank Yono app ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

இரண்டாம் படி – ஆப்பில் now என்பதைக் கிளிக் செய்யவும்.

மூன்றாம் படி – அடுத்து கால அளவு (time period) மற்றும் தொகையை (amount) தேர்வு செய்யவும்.

நான்காம் படி – பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு OTP வரும். பணம் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.

Breaking News : தமிழகத்தில் இன்று 161 பேருக்கு கொரோனா பாதிப்பு.

Breaking News : தமிழகத்தில் இன்று 161 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை _2323_ ஆக அதிகரிப்பு.

        - சுகாதாரத்துறை

கல்லூரி மாணவா்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி: யுஜிசி முடிவு

கல்லூரி மாணவா்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி: யுஜிசி முடிவு
நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதல், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவா் என யுஜிசி தெரிவித்துள்ளது.
யுஜிசி புதன்கிழமை வெளியிட்ட புதிய கல்வியாண்டுக்கான இறுதி செய்யப்பட்ட வழிகாட்டுதல்களின் விவரம்: கரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களை தவிர இதர பகுதியில் உள்ள பல்கலை, கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவாா்கள். அதேநேரம் இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படும். கரோனா பாதிப்பு காலங்களில் விரைவாக முடிவெடுக்க யுஜிசி சாா்பில் சிறப்பு மையம் அமைக்கப்படும். அதேபோல், அனைத்து பல்கலை.களிலும் மாணவா்களுக்கு வழிகாட்ட உதவி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். வரும் கல்வியாண்டில் 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்திலும், முதலாண்டுக்கான வகுப்பை செப்டம்பரிலும் தொடங்க வேண்டும். நிகழாண்டு இழப்பை ஈடுசெய்ய 2020-21-ஆம் கல்வியாண்டில் பல்கலை.கள் 6 நாள் வாரமுறையை பின்பற்றலாம் என்பன பல்வேறு உள்ளிட்ட அம்சங்கள் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தது யூஜிசி

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தது யூஜிசி
சென்னை: ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என கூறியுள்ளது. முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

முக கவச வினியோகத்தில் இந்திய அஞ்சல் நிறுவனம்

முக கவச வினியோகத்தில் இந்திய அஞ்சல் நிறுவனம்
சென்னை : இந்திய அஞ்சல் நிறுவனம், கடிதங்களை மட்டும் வழங்காமல்; இந்த நெருக்கடி காலத்தில், முக கவசங்கள், மருந்துகள் போன்றவற்றையும் வீட்டு வாசலுக்கே வந்து வழங்குகிறது. இதற்காக இந்த நிறுவனம், புதிதாக ஒரு ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.'போஸ்ட் இன்போ' எனும் இந்த செயலியை, ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியைப் பயன்படுத்தி, முக கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை அனுப்பலாம். அனுப்பும் பொருட்கள், பெறுநரின் வீட்டு வாசலுக்கே வந்து வினியோகம் செய்யப்படும் என, இந்திய அஞ்சல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முடங்காமல் செயல்பட்டு வருகிறது இந்திய அஞ்சல்.அழுத்தம் மிக்க இந்த காலகட்டத்திலும், அஞ்சலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போது, வழக்கமான பணிகள் தவிர்த்து, முக கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றையும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் வழங்கி வருகிறோம். இதற்கான செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Flash News : கல்லூரிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது எப்போது? யூஜிசி அறிவிப்பு

Flash News : கல்லூரிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது எப்போது? யூஜிசி அறிவிப்பு


கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ஜூலையில் நடத்தலாம்.

முதல்,  இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண் கொண்டு கிரேட் வழங்கலாம். இன்டெர்னல் மதிப்பெண் 50 % முந்தைய தேர்வு மதிப்பெண் 50 % எடுத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட்டில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம். பல்கலைக்கழகங்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கலாம்.

கலை அறிவியல் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு என்ற பரிந்துரையினை ஏற்கவில்லை என யுஜிசி தெரிவித்துள்ளது

தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு

தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் மட்டும் வழங்கும்படி, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் 1,564 கணினி ஆசிரியா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனா். அவா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, 2020 ஜனவரி முதல் டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்க, பள்ளி கல்வி செயலருக்கு, பள்ளி கல்வி இயக்குநா் தரப்பில் கருத்துரு அனுப்பப்பட்டது.

இந்த கருத்துரு பரிசீலனையில் உள்ளதாகவும் தற்காலிக ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு தேவையா என்பதற்கான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பணி நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால், ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் மட்டும் வழங்க, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

ஊரடங்கு நீட்டிப்பா, தளர்வா?:முடிவு செய்ய மே.2 ல் கூடுகிறது அமைச்சரவை

ஊரடங்கு நீட்டிப்பா, தளர்வா?:முடிவு செய்ய மே.2 ல் கூடுகிறது அமைச்சரவை

தமிழகத்தில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவு செய்ய, தமிழக அமைச்சரவை கூட்டம், வரும், 2ம் தேதி நடக்க உள்ளது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், ஏப்., 14 வரை, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய, ஏப்., 11ல், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், ஊரடங்கை நீட்டிக்க முடிவானது. ஆலோசனைஇந்நிலையில், ஏப்., 15 முதல், மே, 3 வரை, நாடு முழுதும் ஊரடங்கை, மத்திய அரசு நீட்டித்தது. தமிழகத்தில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா நோய் கட்டுக்குள் வந்துள்ளது.

சென்னை உட்பட, பெரு நகரங்களில் மட்டும், நோய் பரவல் தொடர்கிறது.எனவே, மே, 3க்கு பிறகும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.அதேநேரம், நோய் தொற்று இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்தி, நோய் பரவல் உள்ள பகுதிகளில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம், கொரோனா தடுப்பை கண்காணிக்க அமைக்கப்பட்ட, 12 குழுக்களில் இடம் பெற்றுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அறிவிப்புநேற்று, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும், முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசித்தார். அப்போது, தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வதற்காக, வரும், 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.முதல்வர் தலைமையில் நடக்கும், அமைச்சரவை கூட்டத்தில், 3ம் தேதிக்கு பின், ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து, முடிவு செய்து அறிவிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் வீணாகும் அரிசி, பருப்பு

அரசுப் பள்ளிகளில் வீணாகும் அரிசி, பருப்பு


அரசு பள்ளிகளில், மதிய உணவுக்கு வழங்கப்பட்ட, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை, டன் கணக்கில் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, மதிய உணவு திட்டம் அமலில் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டு, மாணவ - மாணவியருக்கு, மதிய உணவு வழங்க, ஒன்றரை மாதத்துக்கு முன், அரசின் சார்பில், பொருட்கள் வழங்கப்படும்.


தற்போது, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஒன்றரை மாதத்துக்கான பொருட்கள் பயன்படுத்தப் படாமல், பள்ளி சத்துணவு கிடங்குகளில் உள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட, இந்த பொருட்களை அப்படியே விட்டால், அவை பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகும் நிலை உள்ளது. அவற்றை அகற்றாவிட்டால், டன் கணக்கில் பொருட்கள் வீணாகி, பல கோடி ரூபாய் நஷ்டமாகும்.

எனவே, தமிழக பள்ளி கல்வி துறையும், சமூக நலத் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளிகளில் தேங்கியுள்ள மதிய உணவு பொருட்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்த வேண்டும். அவற்றை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலவச உணவு தயாரிக்க பயன்படுத்தலாம் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கொரோனா - உங்கள் மாவட்டம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எந்த நிறத்தில் உள்ளது தெரியுமா

கொரோனா - உங்கள் மாவட்டம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எந்த நிறத்தில் உள்ளது தெரியுமா




ஆரோக்கியா சேது ஆப், நீங்கள் கொரோனா ஆபத்தில் இருக்கிறீர்களா என்பதை கண்டறிகிறதா? அதன் பயன்கள் என்ன?

ஆரோக்கியா சேது ஆப், நீங்கள் கொரோனா ஆபத்தில் இருக்கிறீர்களா என்பதை கண்டறிகிறதா? அதன் பயன்கள் என்ன?

தமிழகத்தில் ‘கோவிட்-19’ என்ற கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நிலையில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் மத்திய அரசு ‘ஆரோக்கியா சேது’ என்ற கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.

சுகாதாரச் சேவைகளை, நடவடிக்கைகளை முன்கூட்டியே தெரியப்படுத்தவும், ‘கரோனா’ வைரஸ் தொடர்பான அபாயங்கள், அதனை கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகள், தொடர்புடைய ஆலோசனைகளை ‘ஆரோக்கியா சேது’ செயலி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது முக்கிய நோக்கமாகும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் ஆகிய போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘கரோனா’ தொற்று உள்ள ஒருவருடன் நீங்கள் தொடர் கொண்டீர்களா? என்பதை சரிபார்க்க இந்த ஆப் உதவுகிறது.

இதுகுறித்து மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் கூறுகையில், ‘‘ஆரோக்கியா சேது ஆப் ஆனது, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில் கிடைக்கிறது.

இந்த ஆப்பை நிறுவிய பிறகு, விரும்பிய மொழியை தேர்ந்தெடுக்கவும். ஆரோக்கியா சேது ஆப், நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதையும் கணிக்கிறது.

இந்த ஆப்பை பதிவு செய்யும்போது, பெயர், வயது, தொழில் மற்றும் கடந்த 30 நாட்களில் நிகழ்த்திய பயணம் பற்றிய தகவல்கள், சென்று வந்த நாடுகளின் விவரம் போன்றவைகள் கேட்கப்படுகிறது.

‘கோவிட்-19’ சார்ந்த ஆபத்தை பச்சை மற்றும் மஞ்சள் வண்ண குறியீடுகளில் காட்டுகிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டால் கவலைப்பட ஒன்றுமில்லை. ‘தொற்று நோயை தடுக்க சமூக விலகல் மற்றும் வீட்டில் தங்குவது போன்ற வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

உங்களுக்கு ஆபத்து உள்ளது’ என்று மஞ்சள் நிறத்தில் குறிப்பிட்டால் நீங்கள் ஹெல்ப் லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அர்த்தம். இந்த ஆப் மாநிலத்தில் ஒரு ஹெல்ப் லைனை தொடர்பு கொள்ளவும் பரிந்துரைக்கும்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த ஆஃப் மக்களுக்கு ‘கரோனா’ வைரஸ்நோய்(கோவிட்-19) வருவதற்கான ஆபத்தை சுய மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.

தற்போதைய உடல்நலம், வயது, கோவிட்-19, அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவிக்கிறீர்களா என்ற கேள்விகளும் இருக்கும்.

இதன் வழியாக இந்த ‘ஆரோக்கியா சேது’ ஆப் மூலம் நீங்கள் உங்களுக்கான சுய மதிப்பீடு சோதனையை செய்து கொள்ளலாம். அதனால், அனைவரும் இந்த செயலியை பதவிறக்கம் செய்து அதன் பயனை பெற வேண்டும்.

Android app

https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu

iOS :

https://apps.apple.com/in/app/aarogyasetu/id1505825357

பதவிறக்கம் செய்யலாம்.

Smart Techno Teachers Team - ஆசிரியர் குழு மூலமாக இணையவழி இலவச கணினி பயிற்சி!

Smart Techno Teachers Team - ஆசிரியர் குழு மூலமாக இணையவழி இலவச கணினி பயிற்சி!

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்களுக்கு தற்பொழுது இணையவழி இலவச  கணினி பயிற்சி  S3T (Smart Techno Teachers Team) ஆசிரியர் குழு மூலம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு தினமும் 1.30 மணி நேரம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி முதல் வீடியோ உருவாக்கம், இணையவழி மதிப்பீடு செய்தல் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான இணைய மற்றும் ஆன்ட்ராய்டு பயன்பாடுகள் சார்ந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.தினமும் நடைபெறும் வகுப்பினை ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள https://s3t.in/இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மேலும்  இணையவழிப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியினை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி ஆசிரியர் மாதவலாயம் அரசு  மேல் நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் எஸ். சுரேந்திரன் அளித்து வருகிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுப்பு
'ஊரடங்கின் போது, வங்கிக்கு வர முடியாத, மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விடுப்பை, சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பாக கருத வேண்டும்' என, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசின், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறையின் இயக்குனர், கே.வி.எஸ்.ராவ் வெளியிட்ட அறிவிப்பு:ஊரடங்கின் போது, அத்தியாவசிய சேவையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், பணிக்கு வர விலக்குஅளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணியாற்றும், மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கும் பொருந்தும்.ஆனால், பாரத ஸ்டேட் வங்கி, 'ஊரடங்கின் போது பணிக்கு வராத, மாற்றுத் திறனாளி ஊழியர்களின் விடுப்பு, மருத்துவ விடுப்பாக கருதப்படும்' என, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணிக்கு வர, விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், அவர்களது விடுப்பு, மருத்துவ விடுப்பாக கருதப்படும் என, சுற்றறிக்கை அனுப்பியது முறையற்றது. அவர்களின் விடுப்பை, சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பாக கருத வேண்டும்.எனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை நீட்தேர்வு பறிக்கவில்லை வேலூர் சி.எம்.சி. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை நீட்தேர்வு பறிக்கவில்லை வேலூர் சி.எம்.சி. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை நீட்தேர்வு பறிக்கவில்லை என்று வேலூர் சி.எம்.சி. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு நீட் தேர்வு முறையை அறிவித்தது.இதையடுத்து, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில், நீட் தேர்வு இருப்பதாக வேலூர் சி.எம்.சி., மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தன.

ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் எனவும், மனுக்கள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து மனுக்கள் அனைத்தும் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினித் சரண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுநேற்று இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுகள் சமூக அமைப்பில் நடைமுறையில் உள்ள சீர்கேடுகள் மற்றும் பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.நீட் தேர்வு முறை வலியுறுத்தும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மதம் அல்லது மொழி சார்ந்த சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களின் நிர்வாக முறைகளில் எந்த வகையிலும் குறுக்கிடவில்லை.

இது எந்த வகையிலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையிலும் இந்த தேர்வுகள் இல்லை. எனவே இந்த அடிப்படையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முதன்முதலாக புயலுக்குத் தமிழ்ப் பெயா்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது

முதன்முதலாக புயலுக்குத் தமிழ்ப் பெயா்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களில் பெயா்ப் பட்டியலில் 2 தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்தபோது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள்வழங்கப்பட்டன.2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டன. இதில் தாய்லாந்து சாா்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்)என்ற பெயா் மட்டும் மீதமிருக்கிறது. இது அடுத்து வரும் புயலுக்கு வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் இனி வர உள்ள புயல்களுக்குப் பெயா் வைக்கும் அட்டவணை தயாா் செய்யும் பணிகள் தொடங்கின.

இதற்கு நாடு முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டன. இவற்றை புதுதில்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2 தமிழ்ப் பெயா்கள்:

இதுகுறித்து இந்திய வானிலைத் துறையின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயாா் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம்.

இதில் நாங்கள் கொடுத்த ‘முரசு’ எனும் பெயா், பட்டியலில் 28-ஆவது இடத்தில் உள்ளது. இது தவிா்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட ‘நீா்’ எனும் பெயரும் 93-ஆவதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய அவசரச் சட்டம் பிறப்பித்தது கேரள அரசு

அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய அவசரச் சட்டம் பிறப்பித்தது கேரள அரசு

கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பைச் சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 6 நாள் ஊதியம், 5 மாதங்கள் பிடிக்கப்படும் என்று பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த ஏதுவாக மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
கரோனா வைரஸால் கேரள மாநிலம் அடைந்த பாதிப்பைச் சரிசெய்ய போதுமான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு சமீபத்தில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ‘‘கேரள மாநிலத்தில் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் வாங்குவோருக்கு 6 நாட்கள் ஊதியம் அடுத்த 5 மாதங்களுக்குப் பிடிக்கப்படாது. மாநில அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு, தனியார் கூட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்கு மட்டும் பிடிக்கப்படும்.

மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், ஆணையங்களில் இருப்போர் ஆகியோரின் ஊதியம் 30 சதவீதம் பிடிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதேசமயம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை ஏற்கெனவே அளித்தவர்களுக்கு இது பொருந்தாது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கேரள நீர் ஆணையப் பணியாளர் அமைப்பு, காங்கிரஸின் ஐஎன்டியுசி, கேரள வித்யூதி மஸ்தூர் சங்கம் ஆகியவை இணைந்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசின் ஊதியப் பிடித்தம் உத்தரவுக்கு எதிராகத் மனுத்தாக்கல் செய்தது. ஊழியர்களின் ஊதியத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ள அரசுக்கு உரிமையில்லை, ஊதியத்தைப் பிடித்தம் செய்யும் உத்தரவு தவறானது எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி குரியன் தாமஸ் அமர்வு இந்த உத்தரவை அடுத்த இரு மாதங்களுக்கு செயல்படுத்தத் தடை விதிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் நிறுத்த ஏதுவாக ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை பிடித்தம் செய்வதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ‘‘பேரிடரின் போது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் அளவுக்கு ஒத்திவைக்க புதிதாக பிறப்பிக்கப்பட உள்ள அவசர சட்டம் வழிவகுக்கும்.
ஒத்திவைக்கப்பட்ட சம்பள தொகையை, மீண்டும் எப்போது அளிக்கலாம் என்று 6 மாதத்திற்குள் அரசு முடிவு எடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே அறிவித்தபடி 6 நாட்கள் சம்பளம் மட்டுமே அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இதுபோன்ற நடவடிக்கைக்கு சட்டம் இல்லை என உயர் நீதிமன்றம் கூறியதால், சட்டப்பூர்வமாக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விரைவில் மேல் முறையீடு செய்வோம்” என்றார்.

1-9 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க இயக்குனர் உத்தரவு

1-9 வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க இயக்குனர் உத்தரவு



"D" பிரிவு ஊழிர்கள் மிகுந்த பாதிப்பு அடைவார்கள் - ஊழியர் சங்கம் கோரிக்கை

"D" பிரிவு ஊழிர்கள் மிகுந்த பாதிப்பு அடைவார்கள் - ஊழியர் சங்கம் கோரிக்கை




அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளத்தின் தலைவர் கே.கணேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றி தங்களுடைய விடுப்பினை சேமித்து வைத்து ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்து (சரண்டர் செய்து) அதனை பணமாக காலம் காலமாக பெற்று வந்தார்கள். 

அதனை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மேலும், விலைவாசியை கருத்தில் கொண்டு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.



தற்போது வீட்டிற்குள்ளே அடைத்து வைத்தும் விலைவாசி ஏற்றம் இருக்கிற சூழலில் அகவிலைப்படியை நிறுத்தி வைத்திருப்பதும் ஏழை, எளிய பணியாளர்களாக பணியாற்றும் டி பிரிவினருக்கு மிகுந்த பாதிப்பையும், மன உளைச்சலையும் உருவாக்கும். 

எனவே, தமிழக முதல்வர் மேற்படி உத்தரவை மறுபரிசீலனை செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகநிலைப்படி மற்றும் சரண் விடுப்பு தொகையை தடையின்றி வழங்க, உடனே உத்தரவிட வேண்டும்.

ஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம்

ஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம்

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் (Green House Gases) ஓசோன் படலத்தில் கடந்த காலங்களில் ஆங்காங்கே பெரிய பெரிய துளைகள் ஏற்பட்டன.

இந்த சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் பரவியதால்சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா என பல நாடுகளில் வெவ்வேறுகால கட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் கால வரையின்றி மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் பூமியில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவும் வெகுவாக குறைந்தது.

பூமியில் ஏற்பட்டுள்ள இந்த தீடீர் மாற்றத்தால் ஓசோன் படலத்தின் துளைகள் குறைந்துள்ளதா என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த மாதம் ஆராய்ச்சி செய்தனர். ஆனால், பூமியின் வடதுருவமான ஆர்ட்டிக்கின் மேற்பகுதியில் இருக்கும் ஓசோன் படலத்தில், ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவில் பெரிய துளை புதிதாக உருவாகியிருந்தது. மேலும், இந்த துளையானது தென் துருவத்தை நோக்கி விரிவடைந்தும் வந்தது. இந்த செய்தியானது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த துளை தொடர்பாக செயற்கைக்கோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிசயிக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த அந்த ராட்சத துளை தாமாக மூடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தாமாக மூடிக்கொண்டதற்கு, பூமியில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனால், இந்தக் கூற்றினை விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் 'போலார் வோர்டெக்ஸ்' எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு

ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு

ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிறுத்திவைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகியவை தொடா்பாக வெளியிட்டுள்ள அரசாணைகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அரசு ஊழியா்கள்-ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் கரோனா நோய்த் தாக்குதலுக்கு எதிரான போரில் முழுமையாகப் பணியாற்றி வருகின்றனா். அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் தங்களது ஒருநாள் ஊதியத்தை ஏறத்தாழ ரூ.150 கோடியை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கினா்.

அதுமட்டுமல்லாமல், உணவின்றி தவிக்கும் ஏராளமான ஏழைகள், மாணவா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, பொருளுதவி அளித்தும் உணவு வழங்கியும் தங்களது சமுதாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இத்தகைய சூழலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நிகழாண்டு ஜனவரி முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரை அகவிலைப்படியை நிறுத்தி வைப்பது, ஈட்டிய விடுப்பை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது, ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை 7.9-இல் இருந்து 7.1 சதவீதமாக குறைப்பது ஆகியவை தொடா்பான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அரசு ஊழியா்களிடையே பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த 2003- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோவு செய்வதற்கு தடை விதித்தது. ஆனால், தற்போது வேலை நியமனத் தடை சட்டத்தை மாற்று வழியில் அமல்படுத்தும் வகையில், அரசாணை 56-ஐ வெளியிட்டு, அதன்கீழ் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதி சேஷய்யா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி, தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியா், அரசு ஊழியா் பணியிடங்களை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கான பணிகளை அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் 67 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் உள்ள சமூகப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது.

இது தவிர, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலாக்கி, ஆசிரியா்கள்-அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்தை கேள்விக்குறியாக்கியதை யாரும் மறந்துவிட முடியாது. இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் அரசு ஊழியா்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அா்ப்பணிப்பு உணா்வோடு கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி உடனடியாக இந்த அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஊழியா்-ஆசிரியா் நல கூட்டமைப்பு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன


 

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க முடிவு?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க முடிவு?
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க தேர் வுத்துறை முடிவு செய்துள் ளது . பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியு டன் முடிந்தன . தேர்வுகள் நடந்து கொண்டு இருக் கும் போதே , 22ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவது என்றும் , அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது . இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்ப டாமல் நின்று போனது .
மேற்கண்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகத் தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விடைத் தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு , அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுப டுத்தப்பட இருந்தனர் . ஊரடங்கு முடிந்த பிறகு இந்த பணியை தொடங்க லாம் என்று தேர்வுத்துறை முடிவு செய்தது .
இந்நிலையில் , மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் , 29ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத் தும் பணியை தொடங்க தேர்வுத்துறை திட்ட மிட்டுள் ளது . ஆனால் , விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர் கள் வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை . அதனால் வீடுக ளில் இருந்தே ஆசிரியர் கள் விடைத்தாள் திருத்த வைக்க ஆலோசிக்கப்பட் டது .ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப் படவில்லை . மேலும் , விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு
ஆசிரியர்கள் வந்தால் , ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்த வேண்டிய நிலை ஏற்படும் . அங்கு கண்காணிப்பு பணியில் இருவர் இருக்க வேண்டும் . திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் உள் ளிட்டவற்றை எடுத்துவர ஒரு வர் தேவை . இதனால் சமூக இடைவெளி இல்லாமல் போகலாம் என்பதால் , ஆசிரியர்கள் வருவதில் சிக்கில் நீடிக்கிறது . அத னால் , ஊரடங்கு குறித்து அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவித்தால் தான் விடைத் தாள் திருத்தும் பணி தொடங் கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .
ஆனால் , 29ம் தேதிக்கு பிறகு இந்த பணியை தொடங்குவது என்பதில் தேர்வுத்துறை தீவிரமாக இருக்கிறது .

சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா? - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்!

சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா? - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்!
ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள சமயத்தில் சிபிஎஸ்சி கல்வித்திட்ட தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மறுதேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதன்படி சிபிஎஸ்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் நடைபெறாது. குறிப்பிட்ட சில பாடங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை மட்டுமே தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாணவர்கள் வீடுகளில் பெற்றோர்களால் தொடர்ந்து படிக்க கட்டாயப்படுத்தப்படுவது மற்றும் ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்டவற்றால் மன உளைச்சல் அடைவது குறித்து காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'மாணவர்களை தொடர்ந்து படிக்கும்படி பெற்றோர்கள் வற்புறுத்த வேண்டாம்.குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். அதே சமயம் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களை படிக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும் தேர்வு கால அட்டவணை ஊரடங்கு முடிந்த பின்பு அறிவிக்கப்படும் என்றும் தேர்வு இல்லாத பாடங்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண்கள் தகுதியாக ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி வருகிறார்கள் தெரியுமா?

சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி வருகிறார்கள் தெரியுமா?

சீனாவில் கொரோனா நோய் தொற்று குறைந்திருக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கைகளுடன் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. என்ன நோய் என்ற கண்டுபிடிக்கவே சுமார் 15 நாட்களுக்கு மேல் ஆனது. அதற்குள் கொத்துக்கொத்தாக பல உயிர்களை கொரோனா பறித்தது.

சமூக விலகலை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை சீனா நம்பியது. இதையடுத்து மக்கள் வெளியே வரக்கூடாது என்ற கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கிப் போயின. பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்காகவே சிறப்பு முகாம்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன.

வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் தேவையான பொருட்களை வாங்க புதிய வழிமுறைகளை சீன அரசு பின்பற்றும் படி அறிவுறுத்தியது. குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர ஒரு நபர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை அடையாளம் காணும் வகையில் ஆப்பை தயாரித்தது. அதன் மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணித்தது. 75 நாட்கள் வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இதற்கு பலனாக மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பினர்.

தனித்தனியாக அமர்ந்து படிக்கும் சீனா மாணவர்கள்

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு சீனாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடைவெளி விட்டு தனித்தனியாகவே மாணவர்கள் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அனைத்து பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வகுப்பறையில் இருப்பவர்கள் பாதியாக பிரிக்கப்பட்டு பாடங்கள் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் இன்னும் 15 நாட்கள் வரை மட்டுமே என சீன அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியே தொடங்க தேர்வுத்துறை முடிவு?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியே தொடங்க தேர்வுத்துறை முடிவு?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியுடன் முடிந்தன.

தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் போதே, 22ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவது என்றும், அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால்  விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்படாமல் நின்று போனது.

மேற்கண்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு, அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தனர். ஊரடங்கு முடிந்த பிறகு இந்த பணியை தொடங்கலாம் என்று தேர்வுத்துறை முடிவு செய்தது.

இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால், 29ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க தேர்வுத்துறை  திட்டமிட்டுள்ளது. ஆனால், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை.

அதனால் வீடுகளில் இருந்தே ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது  குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் வந்தால், ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அங்கு கண்காணிப்பு பணியில் இருவர் இருக்க வேண்டும். திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துவர ஒருவர் தேவை. இதனால் சமூக இடைவெளி இல்லாமல் போகலாம் என்பதால், ஆசிரியர்கள் வருவதில் சிக்கில் நீடிக்கிறது.

அதனால், ஊரடங்கு  குறித்து அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவித்தால் தான் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  ஆனால், 29ம் தேதிக்கு பிறகு இந்த பணியை தொடங்குவது என்பதில் தேர்வுத்துறை தீவிரமாக இருக்கிறது.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - ஸ்டாலின் எதிர்ப்பு!

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - ஸ்டாலின் எதிர்ப்பு!

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்று பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் ஒருநாள் ஊதியததை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் வழங்கியதாகவும், கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியற்றி வருவதகாவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கை அவர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கை நிதி மேலாண்மை படுக்குழிக்குள் தள்ளப்பட்ட விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக்கமிஷன் பகிர்வு போன்ற நிதியை அழுத்தம் கொடுத்து உடனே பெற வேண்டும் என்றும்

அதைவிடுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!




கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்,  அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காணொலி காட்சி மூலமாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடுபட்ட ஆலோசனையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.






கொரோனா இன்று உலகையே முழுவதும் முடக்கியுள்ள நிலையில் பள்ளி , கல்லூரிகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிய நிலையில் தொடர்கிறது.மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதன் பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.


அதில்,  பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். மத்திய,  மாநில அரசுகள் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவர் என்றும்,  பள்ளிகள் திறக்கும் போது மாணவ,  மாணவியர்களுக்கு ஷூ,  சாக்ஸ்,  பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் என்னனென்ன தெரியுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் என்னனென்ன தெரியுமா?



Flash News: அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்க தடை! உயர்நீதீமன்றம் உத்தரவு!

Flash News: அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்க தடை! உயர்நீதீமன்றம் உத்தரவு!


*கேரளா அரசின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை*


*மாதம் ஒன்றிற்கு ஆறுநாள் ஊதிய வீதம் ஆறு மாதங்களுக்கு ஊதியத்தை பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டு இருந்தது.*


*தனிநபரின் உரிமையை அரசு பறிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்*


*ஒரு உத்தரவின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து.*


*வேலைக்கு ஊதியம் பெறுவது ஊழியர்களின் உரிமை அது சொத்து உரிமைக்கு சமமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.*

ஆராய்ச்சி படிப்பு உதவி தொகை புதிய விதிமுறைகள் வெளியீடு

ஆராய்ச்சி படிப்பு உதவி தொகை புதிய விதிமுறைகள் வெளியீடு

ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை பெற, புதிய விதிகளை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகையைப் பெற, யு.ஜி.சி., நடத்தும் நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும்.தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதந்தோறும் உதவித் தொகையும், கல்லுாரிகள், பல்கலைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள தேவையானசெலவுத் தொகையும் வழங்கப்படும்.இதில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான, புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி இனி, உதவித் தொகை பெற ஆண்டுதோறும், 1,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முழு நேர, பிஎச்.டி., அல்லது எம்.பில்., படிப்பவர்களுக்குமட்டுமே, உதவித் தொகை வழங்கப்படும்.அவர்களில், ௪ சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக இருக்க வேண்டும்.

எம்.பில்., படிப்பவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஐந்து ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.முதல் இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 31 ஆயிரம் ரூபாயும்; பின், மூன்று ஆண்டுகளுக்கு, 35 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை வழங்கப் படும்.இது தவிர, செலவுத் தொகையாக மாதம், 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.முழு விபரங்களை, யு.ஜி.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா? மத்திய மந்திரி விளக்கம்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா? மத்திய மந்திரி விளக்கம்

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் நிதி தேவைக்காக, மத்திய அரசு, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. எம்.பி.க்கள் சம்பளத்தை குறைத்துள்ளது. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 50 ஆக குறைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

மத்திய மந்திரி விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது:-கடந்த சில நாட்களாக, சில உள்நோக்கம் கொண்ட சக்திகள், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் மனதில் குழப்பம் எழுவதை தவிர்ப்பதற்காக, அதற்கு உரிய மறுப்பு தெரிவித்து வருகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை. கொரோனா வைரஸ் சவால் உருவெடுத்ததில் இருந்தே அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்குத்தான் மத்திய அரசும், மத்திய பணியாளர் நலத்துறையும் முடிவுகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரசால் நாடு தவிக்கும்போது, கொரோனாவை கையாளும் நடவடிக்கைக்காக பிரதமர் மோடியை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டும்போது, சிலர் மத்திய அரசின் செயல்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.

இதுபோலவே, ஓய்வூதியத்தை 30 சதவீதம் குறைக்கவும், 80 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பொய்ச்செய்தி பரப்பப்பட்டது.ஆனால், உண்மை என்னவென்றால், கடந்த மாதம் 31-ந் தேதி, ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவருக்கும் ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டாம்; திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்: அரசுக்கு கல்வி பாதுகாப்பு அமைப்பு யோசனை

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டாம்; திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்: அரசுக்கு கல்வி பாதுகாப்பு அமைப்பு யோசனை

கரோனா பாதிப்பால் தற்போது நிலவும் அசாதாரண சூழலில் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக திருப்புதல் தேர்வு மதிப்பெண்அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம் என்றும் தமிழக அரசுக்கு கல்வி பாதுகாப்பு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வே.வசந்தி தேவி, செயலர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மேல்நிலைக் கல்வியில் சேருவதற்கும் ஐடிஐ, பாலிடெக்னிக்போன்ற தொழிற்கல்வியில் சேருவதற்கும் 10-ம் வகுப்பு சான்றிதழ் அவசியம் என்பதால் எஸ்எஸ்எல்சி தேர்வை அவசியம் நடத்த வேண்டும் என்று நிலைப்பாட்டுக்கு தமிழக அரசு வந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த பேரிடர்காலத்தில் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படலாம். அதோடு சமூக பரவல் உருவாகலாம்.

அசாதாரண சூழலில் தமிழக அரசு பொது தேர்வை தவிர்த்த முன்னுதாரணங்கள் பள்ளிக் கல்வித் துறையில் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு வேலூரில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்ஆங்கிலம் 2-ம் தாள் விடைத்தாள்கள் எரிந்தன. அப்போது, அந்த விடைத்தாள்கள் எழுதிய மாணவர்களின் ஆங்கிலம் முதல்தாள் மதிப்பெண் அல்லது மற்ற பாடங்களில் எடுத்த சராசரி மதிப்பெண் இதில் எது அதிகமாக இருந்ததோ, அந்த மதிப்பெண் வழங்கப்பட்டது.

இதேபோன்று, கடந்த 2013-ம் ஆண்டு விழுப்புரம் செஞ்சி சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் காணாமல் போன சம்பவத்தில் முந்தைய நிகழ்வை முன்னுதாரணமாக கொண்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.அந்த அடிப்படையில், தற்போதைய அசாதாரண சூழலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்குப் பதிலாக திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஏ,பி, சி என 3 விதமான தேர்ச்சி கிரேடுகள் வழங்கலாம். குறைந்தபட்ச தேர்ச்சி என்ற சி கிரேடை அனைத்து தனித்தேர்வர்களுக்கும் வழங்கிவிடலாம்.

கரோனா பேரிடர் கால சிறப்பு 10-ம் வகுப்பு தேர்வு சான்றிதழில் மாணவரின் பெயர், வயது, கிரேடு போன்றவற்றை வழக்கமான மதிப்பெண் சான்றிதழ் போல இடம்பெறச் செய்யலாம். தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் எங்கள் அமைப்பின் யோசனையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டு கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive