Higher Secondary Examination, March 2020 Camp Schedule.

Higher Secondary Examination, March 2020 Camp Schedule.

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI - 6 .

HIGHER SECONDARY EXAMINATION, MARCH 2020 CAMP SCHEDULE.

                     



One Day Training For Primary & Middle School Teachers - CEO Proceedings

One Day Training For Primary & Middle School Teachers - CEO Proceedings

ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்பு



மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண் இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு இணைப்பில் உள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கு 02 . 03 . 2020 ஒரு நாள் மட்டும் முன்திட்டமிடல் கூட்டம் ( Pre Planning Meeting ) தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளி ( உருது ) , கோட்டையில் நடைபெற இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

Tet - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

Tet - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இளங்கோவன் , மாநில தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதா வது :

கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத் தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது . அதில் தாள்ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது . அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர் . ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் . அதனால் தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது . இரண்டாவது முறை நடந்ததேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்களின் மதிப் பெண்கள் குறித்த விவரங் களை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வில்லை . ஆனால் இதற்கு முன்னதாக நடந்த தேர் வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப் பட்டது . அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது .

குறிப்பாக முதற் கட்ட தேர் வின் போது காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்க ளுக்கான தேர்வில் வெறும் 10 , 12 மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள் , மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள் ளனர் . இது எப்படி நடந் தது . காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார் . இந்த இரண்டு நபர்கள் ஆசிரியர் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம் , ஒரே தேர்வு அறை என்பதை மறுக்கமுடியாது . அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்ததாக பேட்டி அளித் தார் . ஆனால் அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள் ளார் . அவர்களுக்கு ஆசி ரியர் பணி வழங்கப்பட் டுள்ளது . அதற்கு பிறகு நடந்த ஆசிரியர் தேர்வுகளில் 3 மணி நேரம் கால அளவு நீட்டிக்கப்பட்டாலும் , 142 மதிப்பெண் பெற்றவ ரைப் போல இது வரை யாராலும் அந்த மதிப் பெண்ணை பெற முடிய வில்லை என்பது தான் வேடிக்கை . அரசுப்பணிக ளுக்கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரி யம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது .

இந்நிலையில் , 2013ம் ஆண்டு நடந்த ஆசி ரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற் றும் இது வரை எங்களுக்கு பணி நியமனம் வழங்க வில்லை . ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக செயல்பட்டு தகு தியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக்கி யுள்ளனர் . இது போல ஊழல் செய்து உள்ளே நுழைந்த வர்களை அடையாளம் காட்டியும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறை கேடு நடந்துள்ளது . இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட் டது . அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கும் , ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது . ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை . தற்போது பல் வேறு தேர்வுகளில் நடந்த முறை கேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற் பட்டுள்ள நிலையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரி யர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ளது .

அதனால் நீதிமன்றம் தானாக முன் வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறை கேடுகளையும் விசாரிக்க வேண்டும் . சிபிஐ விசார ணையும் வேண்டும் . அப் படி விசாரித்தால் எங்களி டம் உள்ள ஆதாரங்களை கொடுப்போம் .

உங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் 16 வகையான புதிய தண்டனைகள் அறிவிப்பு.

தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் 16 வகையான புதிய தண்டனைகள் அறிவிப்பு.

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான  தேர்வுகளில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை  அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில், புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

16 வகையான தண்டனைகள்

தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை  அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு எழுதும்போது துண்டுச் சீட்டுகள் வைத்திருத்தல், புத்தகங்கள் வைத்திருப்பது கண்டுபிடித்தால் அவர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அடுத்த மாணவரை பார்த்து  எழுதினாலோ, வெளியில் இருந்து  யாராவது உதவி செய்தாலோ அந்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி வாங்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அந்த தேர்வு எழுத முடியாது. மேலும் ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாது.

பொதுத்தேர்வு - மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்!!

பொதுத்தேர்வு - மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்!!





Public Exam 2020 - Teachers Calendar

Public Exam 2020 - Teachers Calendar

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகள் பட்டியல் ( மாவட்ட வாரியாக ....)

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகள் பட்டியல் ( மாவட்ட வாரியாக ....)


நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இப்பட்டியலில் தங்களது மாவட்டத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்கள் ஏதும் விடுபடாமல் பூர்த்தி செய்தும் ( எந்த ஒரு பள்ளியின் விவரங்களும் விடுபடாமலும் ) 02032020 பிற்பகலுக்குள் சி1 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு தவறாது அனுப்பி வைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்

இணைப்பு

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்

Middle School To High School Upgrade School List - Download here...

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள ஒப்புதலுக்கு புது நடைமுறை: உயர்நீதிமன்றம் தடை

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள ஒப்புதலுக்கு புது நடைமுறை: உயர்நீதிமன்றம் தடை


அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளப் பட்டியலில் தாளாளர் ஒப்புதல் கையெழுத்திடும் அதிகாரத்தை மாற்றிய அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல் தயாரித்து தாளாளர் கையழுத்திட்டு, மாவட்டக் கல்வி அலுலவகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அனுமதி கிடைத்ததும் தாளாளர் ஒப்புதலுடன், கருவூலத்திற்கு அனுப்பி, பின் சம்பளம் பட்டுவாடா செய்யும் நடைமுறை இருந்தது. இதில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் 2018 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். 

அதில், 'தாளாளர் அரசு ஊழியர் இல்லை. அவரிடம் ஒப்புதல் கையெழுத்துப் பெறத் தேவையில்லை. பள்ளி உதவி எழுத்தர் சம்பளப் பட்டியல் தயாரித்து, தலைமை ஆசிரியர் சரிபார்த்து கையெழுத்திட்டு, மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்,' என குறிப்பிடப்பட்டது. 

அதை எதிர்த்து கோட்டார் டயோசிஸ் ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்ஸாண்டர் உட்பட பல்வேறு கல்வி நிறுவன நிர்வாகங்கள் தரப்பில், 'அரசின் உத்தரவு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு எதிரானது.

சம்பள பில்லில் கையெழுத்திட தாளாளருக்கு அதிகாரம் உள்ளது. அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றம் கிளையில் மனு செய்யப்பட்டது.நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இடைக்காலத் தடைவிதித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரிய EL பதியாமல் விடுபட்டுள்ளது - பணப்பலன் பெற முடியுமா? - CM CELL Reply!

ஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரிய EL பதியாமல் விடுபட்டுள்ளது - பணப்பலன் பெற முடியுமா? - CM CELL Reply!

பாடாய்படுத்தும் U - Dise பதிவேற்றம்... மன உளைச்சலில் தலைமையாசிரியர்கள்.!!!

பாடாய்படுத்தும் U - Dise பதிவேற்றம்... மன உளைச்சலில் தலைமையாசிரியர்கள்.!!!



கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான யு-டைஸ் பதிவேற்றத்திற்காக அதிக நேரம் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் காத்திருக்கும் நிலை உருவாவதால் பெரும்பாலான தலைமையாசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்களை அளித்து தரவுகளை திரட்டி ஒருங்கிணைந்த குறுவள மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை யு-டைஸ் (U-DISE - Unified District Information System for Education) என்பது இந்தியாவில் உள்ள பள்ளிகளைப் பற்றிய ஒரு தகவல் தரவுத்தளம் ஆகும்.





இத்தரவத்தளம் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்களை பதிவு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப் 30 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடந்த ஆண்டு வரை ஒருங்கணைந்த கல்வி இயக்கம் மூலம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உரிய படிவங்கைள அளித்து தரவுகளை திரட்டி வந்தனர். அத்தரவுகளை வட்டார வளமைய அலுவலகம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தனர். 

ஆனால் இந்தாண்டு எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS - Educational Management Information System) இணையத்தளத்தில் தலைமையாசிரியர்களே நேரடியாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்துவதால் கிராமப்புற பள்ளிகளை சார்ந்த தலைமையாசிரியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுக்குறித்து பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியனோ., " எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னால் அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர், மாணவர் வருகை, விலையில்லா பாடப்பொருட்கள் விநியோகம், மாணவர்களது கல்வி செயல்பாடுகள் என அனைத்தும் இணைய வழியே மேற்கொள்ளப்படுகிறது. இது வரவேற்க வேண்டிய மாற்றம் என்றாலும் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாத கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.


கடந்த காலங்களில் யு-டைஸ் படிவங்கள் பள்ளிகளுக்கு நேரிடையாக வழங்கப்பட்டு விபரங்கள் பெறப்படும். அதன் பின்னால் அவ்விபரங்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்வார்கள். ஆனால் இந்தாண்டு 54 பக்கங்கள் கொண்ட படிவத்தினை தலைமையாசிரியர்களே இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்து உரிய ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்புதல் வாங்கி அதை ஒவ்வொரு தலைமையாசிரியரும் குறிப்பிட்ட நாளுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. 

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இணையத்தள வசதி இல்லாததால் அவர்கள் தனியார் கம்யூட்டர் மையங்களை நாட வேண்டியுள்ளது. அவ்வாறு தனியார் மையங்களில் பதிவேற்றம் செய்யும்பொழுது சர்வர் தாமதத்தால் பல மணி நேரம் அங்கு காத்திருக்க வேண்டியுள்ள நிலைமை ஏற்படுகிறது. மேலும் பதிவேற்றம் செய்த தரவுகள் முறையாக சேமிப்பு ஆகாததால் மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தலைமையாசிரியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

80 சதவீதத்திற்கு மேல் பெண்களே தலைமையாசிரியர்களாக உள்ளதால் அவர்கள் நீண்ட நேரம் கம்யூட்டர் மையங்களில் காத்துக்கிடப்பதில் பல்வேறு பிரச்சணைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்களை அளித்து தரவுகளை திரட்டி ஒருங்கிணைந்த குறுவள மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.

Teacher Exchange Programme - வழிக்காட்டுதல் வழங்குதல் - SPD PROCEEDINGS

Teacher Exchange Programme - வழிக்காட்டுதல் வழங்குதல் - SPD PROCEEDINGS

2020 March, April School Working & Leave Days List

2020 March, April School Working & Leave Days List

மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'

மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
கேம்பிரிஜ்: 'கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று பூமியை சுற்றி வருகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த நிலவு நம்முடன் இருக்காது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும், கேம்பிரிஜில் உள்ள, 'மைனர் பிளானட் சென்டர்' விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பூமியைச் சுற்றி வரும் புதிய, 'குட்டி நிலவு' ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து மூன்று ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம்.



இந்த நிலவு நம்முடன் நீண்ட காலம் இருக்காது. இது பூமியை மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விடும். இதற்கு முன்னர், 1991ம் ஆண்டு '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில ஆண்டுகள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்றது. அதேபோல், 2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது.சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றின் ஆதிக்கம் குட்டி நிலவின் மீது இருப்பதால், அதன் பாதை எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Beo பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக -ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

Beo பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக -ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :-
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறைகள் அறிக்கையில் 01.01.2020 அடிப்படையில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியர்களில் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் அரசாணை நிலை எண் 497 கல்வி அறிவியல் தொழில் நுட்பவியல் துறை நாள் 26. 06.1995 ன்படி 57வயது முடித்தவர்களை வட்டாரக்கல்வி அலுவலர் 


(முன்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம்) நியமனத்திற்கு பரிசீலிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 31.12.2019 அன்று 57 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1995 ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 497 ன்படி ஒரே சம்பள அளவில் பணி மாறுதல் வழங்குவதற்கு மட்டுமே 57 வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்க்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கு இது பொருந்தாது. 


காலம் காலமாக ஓய்வுப்பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன் கூட பதவி உயர்வு வழங்கப்பட்டுவருவது நடைமுறையில் இருந்துவருகிறது. எனவே 57 வயது முடிந்த முழு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பணிமூப்பு பட்டியலில் சேர்த்திட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் - தேர்வுநிலை ,சிறப்புநிலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் - தேர்வுநிலை ,சிறப்புநிலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
[

உயர் பதவிகள்ன்னா Ias , Ips மட்டும் தானா? தெரியாதவர்கள் மட்டும் இதை படிங்க !!

உயர் பதவிகள்ன்னா Ias , Ips மட்டும் தானா? தெரியாதவர்கள் மட்டும் இதை படிங்க !!
உயர் பதவிகள்ன்னா IAS , IPS மட்டும் தானா? தெரியாதவர்கள் மட்டும் இதை படிங்க.
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS , IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும் இந்த பதிவு. ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது தெரிந்துகொள்ளுங்கள். 
01. IAS - Indian Administrative Service 
02. IPS - Indian Police Service 
03. IFS - Indian Foreign Service 
04. IFS - Indian Forest Service 
05. IRS -Indian Revenue Service (Income Tax ) 
06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise ) 
07. IAAS-Indian Audit and Accounts Service 
08. ICAS-Indian Civil Accounts Service 
09. ICLS-Indian Corporate Law Service 
10. IDAS-Indian Defence Accounts Service 
11. IDES-Indian Defence Estate Service 
12. IIS - Indian Information Service 
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service 
14. IPS - Indian Postal Service 
15. IRAS - Indian Railway Accounts Service 
16. IRPS - Indian Railway Personal Service 
17. IRTS - Indian Railway Traffics Service 
18. ITS - Indian Trade Service 
19. IRPFS - Indian Railway Protection Force Service 
20. IES - Indian Engineering Services 
21. IIOFS - Indian Ordinance Factory Service 
22. IDSE - Indian defense engineering services 
23. IES - Indian Economics Services 
24. ISS - Indian Statistics Service 
25. IRES - Indian Railway Service of Electrical Engineers 
26. IREES - Indian Railway Service of Electrical Engineers 
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே… பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. 
ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளில் அமரலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை தமிழக இளைஞர்கள் பலருக்கும் தெரிந்தது எல்லாம், 
VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். 
எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்

பில் கட்டலைனா உடனே கரண்ட் கட்... வருகிறது ஸ்மார்ட் மீட்டர் !

பில் கட்டலைனா உடனே கரண்ட் கட்... வருகிறது ஸ்மார்ட் மீட்டர் !
பில் கட்டலைனா உடனே கரண்ட் கட்... வருகிறது ஸ்மார்ட் மீட்டர்!
விரைவில் நம் அனைவரின் வீடுகளிலும் விரைவில் ஸ்மார்ட் மின்சார மீட்டரைப் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடைசித் தேதிக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால், நம் வீட்டுக்கு வரும் மின்சாரம் தானாகவே 'கட்' ஆகிவிடும்; மீட்டர் ஓடுவதும் நின்றுவிடும். 
அதன் பின்னர், எப்போது நாம் அந்தக் கட்டணத்தைச் செலுத்துகிறோமோ, அப்போது மீட்டர் மீண்டும் ஓடத் தொடங்கும். Smart Meter National Program என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களைப் பொருத்தவுள்ளதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். 
இதற்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றையும் அவர் சமீபத்தில் தொடக்கி வைத்துள்ளார். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் இதில் கிடைக்கும். மொபைல் ரீசார்ஜ் போல Smart Meter National Program திட்டத்திலும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வசதிகள் உள்ளன. 
நம் மின் உபயோகக் கட்டணத்தை குறைந்தது ரூ.50 முதல் இதன் மூலம் செலுத்தலாம். மேலும், தவணை முறையிலும் நம் மின் கட்டணத்தை இத்திட்டத்தின் மூலம் செலுத்த முடியும். 
தேவைப்படும் நேரங்களில் நம் மின் மீட்டரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் முடியும் என்பதால், மின் திருட்டு உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். சில சமயங்களில் மின் மாற்றிகள் மூலம் நம் வீட்டுக்கு அளவுக்கு அதிகமாக மின் சப்ளை வர வாய்ப்புள்ளது.
அந்த சமயங்களில் இந்த ஸ்மார்ட் மீட்டர் உடனடியாக செயல்பட்டு, மின்சாரத்தைத் துண்டித்து விடும். மின் சப்ளை சீரான பிறகு, நமக்கு மீண்டும் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டம் ஏற்கனவே உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் பிஹார் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

School Safety Pledge உறுதிமொழி - அனைத்து வகை பள்ளி சுவரில் எழுத உத்தரவு - Pledge Attached

School Safety Pledge உறுதிமொழி - அனைத்து வகை பள்ளி சுவரில் எழுத உத்தரவு - Pledge Attached


அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

சைலன்ட் ஹார்ட் அட்டாக்... யாருக்கெல்லாம் ஏற்படலாம்? - டாக்டர் எச்சரிக்கை

சைலன்ட் ஹார்ட் அட்டாக்... யாருக்கெல்லாம் ஏற்படலாம்? - டாக்டர் எச்சரிக்கை


மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மாரடைப்பும் இருக்கிறது. உலகம் முழுவதும் இதய பாதிப்பால் உயிரிழப்போரின் சதவிகிதம் அதிகரித்தபடியே உள்ளது. பெரும்பான்மையான மரணங்கள் முதல் மாரடைப்பிலேயே நிகழ்ந்துவிடுகின்றன என்பதுதான் சோகம். மாரடைப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு உண்டு. `நெஞ்சுவலிக்கும் மாரடைப்புக்கும் வேறுபாடு என்ன' என்பது, அவற்றில் முக்கியமானது.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இதயநோய் நிபுணராக சேவையாற்றிவரும் டாக்டர் வி.சொக்கலிங்கம், மேற்கண்ட கேள்விக்கு பதிலளிக்கிறார்.




உலகத்தில் உயிர்க்கொல்லி நோய்கள் மூன்றுதான். மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் விபத்துகள். இவை மூன்றும்தான் உலக மக்களைக் கொன்றுகொண்டிருக்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவை மூன்றுமே வாழ்க்கைமுறை நோய்கள். எதிர்மறை எண்ணங்களாலும் எதிர்மறை வாழ்க்கைமுறையாலும் ஏற்படக்கூடியவை. ஒவ்வொருவரும் மனம் வைத்தால் இந்த மூன்றிலிருந்தும் விடைபெற முடியும்.


நெஞ்சுவலிக்கும் மாரடைப்புக்கும் என்னங்க வித்தியாசம்?' என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. மார்பில் அடைப்பு போன்று இருப்பதால்தான் அதற்கு மாரடைப்பு என்று பெயர். நெஞ்சுக்குள் இருப்பது இதயம். அந்த இதயத்தில் ஏற்படும் நோயால் வருவதே நெஞ்சுவலி. உடலின் இடது பாகத்தில் எலும்புக்கூட்டின் உள்ளே உள்ளது இதயம். எப்போதெல்லாம் இதயத் தசைகளுக்குச் செல்ல வேண்டிய பிராண வாயு குறைகிறதோ அதுதான் மாரடைப்பு.

இது ஏற்படும்போது அதிக எடையுள்ள கல்லைத் தூக்கி வைத்ததுபோல இருக்கும். இந்த வலி இடது தோள்பட்டை வரையிலும் சில நேரங்களில் இடது சுண்டுவிரல் வரையிலும் நீடிக்கும். சிலருக்கு வலது தோள்பட்டை, கழுத்து, முதுகு, வயிறு போன்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்பு உண்டு.


இந்த அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படும்போது தசைவலி, மூட்டுவலி, வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை என்று நினைத்து விட்டுவிட்டால் அது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். மேற்கண்ட எந்த அறிகுறியாக இருந்தாலும் அதை மருத்துவரிடம் எடுத்துக்கூறும்போது அவர்தான் அது மாரடைப்பா அல்லது வேறு வகையான பிரச்னையா என்பதைக் கண்டறிந்து சொல்வார்.


மாரடைப்போ, நெஞ்சுவலியோ ஒருவருக்கு ஏற்படும்போது வியர்வை முக்கியமான அறிகுறியாக இருக்கும். படபடப்பாக இருக்கும், சோர்வாகவும் காணப்படுவார்கள். நூற்றில் 95 பேருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோர், குடிப்பழக்கம் உள்ளவர்கள், 80 வயதைத் தாண்டியவர்கள், தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள் இந்த வலியை உணராமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு 5% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக் (Silent heart attack)' வர வாய்ப்பு உண்டு.

சர்க்கரைநோயோடு புகை, மது பழக்கம் உள்ளவராக இருந்து வயது 80 ஆக இருந்தால் அவருக்கு 40% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இசிஜி (Electrocardiography) எடுத்துப் பார்ப்பது அவசியம்!" என்கிறார் வி.சொக்கலிங்கம்.

இந்த வருடத்தின் மோசமான Password வெளியான பட்டியல், லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?

இந்த வருடத்தின் மோசமான Password வெளியான பட்டியல், லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?


நாம் பயன்படுத்தும் செல்போன், கம்ப்யூட்டர், இ மெயில், நெட்பேங்கிங் என எல்லாவற்றிக்கும் பாஸ்வோர்ட்களை நாம் விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். இதனால் மிக எளிதாக நம் நினைவுகளில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே நம்மில் பலரும் விரும்புவோம்.

நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் நம் பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் நமது பாஸ்வோர்ட்களை ஹேக் செய்து திருட்டு வேலைகளில் ஈடுபட நம் அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே உண்மை.

சர்வதேச அளவில் 2019 ஆம் ஆண்டில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எளிதாக கண்டுபிடிக்க கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, worst passwords of 2019 என்ற பெயரில் Splash Data என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஆண்டுதோறும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வோர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.

Splash Data என்ற நிறுவனம் வெளியிட்ட worst passwords of 2019 பட்டியல் விவரம் பின்வருமாறு:


மோசமான பாஸ்வோர்ட்கள் பட்டியலில் வழக்கம் போல இந்த ஆண்டும் 123456, 123456789, qwerty, மற்றும் password ஆகிய பாஸ்வோர்ட்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் நான்காம் இடத்தில் உள்ள password, கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது.

1. 123456

2. 123456789

3. qwerty

4. password

5. 1234567

6. 12345678

7. 12345

8. iloveyou

9. 111111

10. 123123

2020 வருடம் பிறப்பதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நீங்கள் ஒரு புத்தாண்டு தீர்மானத்தை எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் என உங்கள் பாஸ்வோர்ட்களை மேம்படுத்த சபதம் செய்யுங்கள். அதன்படி உங்கள் இ மெயில், நெட்பேங்கிங் மின்னஞ்சல், வங்கி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகள் சமூகவலைத்தள கணக்குகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்ட்களை உருவாக்கி கொள்வது அவசியம்.

நாளை 29.02.2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - CEO Proceedings

நாளை 29.02.2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - CEO Proceedings

29.02.2020 அன்று சனிக்கிழமை பள்ளிகள்‌ முழு வேலை நாள்‌ - தகவல்‌
தெரிவித்தல்‌ -- சார்பு.

29.02.2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப்‌ பள்ளிகளும்‌
முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்‌ என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ இந்நாளில்‌ மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 29.02.2020 அன்று சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது .


தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Ceo அவர்களின் வாழ்த்து கடிதம்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Ceo அவர்களின் வாழ்த்து கடிதம்

Dee - ஆசிரியர்கள் மீது விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.

Dee - ஆசிரியர்கள் மீது விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.
தொடக்கக்கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்குமுறைகள் மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோரல் – சார்ந்து .
இவ்வியக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர் , விவரம் , விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம் , விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 02 . 03 . 2020 - க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி!

ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்பு

மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண் இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு இணைப்பில் உள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கு 02 . 03 . 2020 ஒரு நாள் மட்டும் முன்திட்டமிடல் கூட்டம் ( Pre Planning Meeting ) தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளி ( உருது ) , கோட்டையில் நடைபெற இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு.

தர்மபுரி மாவட்ட அளவிலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை 29.02.2020 அன்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். நாளை மாவட்ட அளவில் வெற்றிபெறும் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் மாநில அளவிலான அரசு ஊழியர் ஆசிரியர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தர்மபுரி மாவட்டம் சார்பில் அனுமதிக்கப் படுவர்...

வினா வங்கி புத்தகங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை

வினா வங்கி புத்தகங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை
சென்னை: புதிய பாடத் திட்டத்தின்படி அச்சிடப்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான வினா வங்கி புத்தகம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயலா் திருவளா்செல்வி தெரிவித்துள்ளாா்.




தமிழக பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோவு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்ட தமிழக அரசின் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் வினா வங்கி புத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது. இவற்றை முழுமையாக படித்தால் தோச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவா்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமாக நவம்பா் மாதத்தில் வினா வங்கி வெளியாகிவிடும். ஆனால், இந்த இரு வகுப்புகளுக்கும் நிகழாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் வினா வங்கி தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.




இந்தநிலையில், 10, 12 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் வினா வங்கி புத்தகங்கள் வெளியாகின. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான வினாத்தாள் தொகுப்பு (வினா வங்கி) தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாக ரூ.60 விலையிலும், அதேபோல், பிளஸ் 2 மாணவா்களுக்கான கணித பாட வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீா்வுப் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு தனித்தனியாக ரூ.80 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வினா வங்கி அனைவருக்கும் கிடைப்பதற்காக மாவட்டத்துக்கு ஒரு பள்ளியில் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் சேத்துபட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

மாணவா்கள் வலியுறுத்தல்: இந்த நிலையில் வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவுவதாக மாணவா்கள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், பல மையங்களில் பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம் காலியாகி விட்டதாக கூறுகின்றனா். பிளஸ் 2 வகுப்புக்கும் சில பாடங்களுக்கே கிடைக்கிறது. இதற்காக தினமும் விற்பனை மையங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. பொதுத் தோவுக்கு சில நாள்கள் மட்டுமே இருப்பதால் மாணவா்கள் நலன்கருதி அனைத்துப் பள்ளிகளிலும் வினா வங்கி கிடைக்க கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.




தட்டுப்பாடு இல்லை: இது குறித்து, தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயலா் திருவளா்செல்வி கூறியது: பிளஸ் 2 ஆங்கில வழியில் பயிலும் கணிதப் பிரிவு மாணவா்களுக்காக வினா வங்கி புத்தகங்கள் 1.50 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 1.10 லட்சம் பிரதிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கான கணித பாட வினா வங்கி புத்தகங்கள் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு அவற்றில் 30 ஆயிரம் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அறிவியல் பிரிவில் அச்சிடப்பட்ட ஒரு லட்சம் பிரதிகளில் தற்போது 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பில் உள்ளன. கலைப்பிரிவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் மூன்று மடங்கு பிரதிகள் அதாவது 15 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், பத்தாம் வகுப்பிலும் தேவையான வினா வங்கி புத்தகங்கள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் எந்தவொரு மையங்களிலும் தட்டுப்பாடு ஏற்படாத அளவுக்கு புத்தகங்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




டிபிஐ வளாகத்துக்கு அலைய வேண்டாம்: கடந்த ஆண்டு வரை இந்த வினா வங்கி புத்தகங்கள் சென்னை மாவட்ட மாணவா்களுக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடுபெற்றோா் ஆசிரியா் கழகத்தின் கவுன்ட்டா்களில் விற்பனையானது. ஆனால் நிகழாண்டு அதன் சேமிப்பு கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அதற்குப் பதிலாக சென்னையில் கூடுதலாக 2 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 3 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




இருப்பினும், தினமும் டிபிஐ வளாகத்துக்கு குறிப்பிட்ட அளவில் மாணவா்கள், பெற்றோா் வந்து செல்கின்றனா். இதனால் அலுவலகத்தின் முகப்பில் சென்னையில் வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்களின் விவரங்களையும், பிற அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும் மையங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, மாணவா்களும், பெற்றோரும் வினா வங்கி பெறுவதற்காக டிபிஐ வளாகத்துக்கு அலைய வேண்டாம். வெளி மாவட்டங்களில் உள்ள மாணவா்களுக்கு மையங்களின் விவரங்கள் தெரியாவிட்டால் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தை 044-28279758 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்ய எதிர்ப்பு!

ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்ய எதிர்ப்பு!

மரபுத் தொடர்கள் விளக்கம் !!

மரபுத் தொடர்கள் விளக்கம் !!


ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழி வழியாக (மரபு வழியாக)  வழங்கிவரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும்.
பொதுவாக வழங்கும் மரபுத் தொடர்கள் , சமூகத்திற்கு சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல மரபுத்தொடர்கள்  தமிழில் காணப்படுகிறன.
இதன் ஆங்கிலப் பதம் idioms and phrases என்பதாகும்.

மரபுத் தொடர்களுக்கான உதாரணங்கள்

[ அ ]
   01 . அள்ளிக் குவித்தல் - நிறையச் சம்பாதித்தல்
02 . அறைகூவுதல்- போருக்கு அழைத்தல்
03 . அரை மனிதன் - மதிப்பில்லாதவன்
04 . அண்டப்புழுகன்- பொய்காரன்
05. அலைக்கழித்தல்- அலட்சியம் செய்தல்
06. அறுதியிடுதல் - முடிவுகட்டுதல்
07. அகடவிகடம்- தந்திரம்
08. அரைப்படிப்பு - நிரம்பாத கல்வி
09. அடியொற்றுதல்- பின்பற்றுதல்
10. அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்
11. அடுக்கு பண்ணுதல் - ஆயத்தம் செய்தல்
12. அடியிடுதல் - தொடங்குதல்
13. அடிநகர்தல்- இடம்பெயர்தல்
14. அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல்
15. அடி திரும்புதல்- பொழுது சாய்தல்
16. அடிப்பிடித்தல்- தொடருததல்
17. அடி பிறக்கிடுதல் - பின்வாங்குதல்
18. அரக்கப் பறக்க - விரைவாக
19. அடியுறைதல் - வழிப்படுத்தல்
20. அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்
21. அகலக் கண் வைத்தல் - அளவு கடந்து போதல்
22. அழுங்குப்பிடி - விடாப்பிடி
23. அறுதியிடல் - முடிவு கட்டுதல்
24. அமளி செய்தல் - குழப்பம் செய்தல்
25. அடி பணிதல் - கீழ்ப்பணிதல்
26. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச் செய்தல்
27. அகலக் கால் வைத்தல் - அளவுகடந்து போதல்

[ ஆ ]
28. ஆகாயக் கோட்டை - மிதமிஞ்சிய கற்பனை
29. ஆறப்போடல் - பிற்போடல்
30. ஆசை வார்த்தை - ஏமாற்றுப் பேச்சு
31. ஆட்கொள்ளல் - அடிமை கொள்ளல்
32. ஆழம் பார்த்தல் - ஒருவரின் தகுதி பற்றி ஆராய்தல்
33. ஆயிரம்காலத்து பயிர் - நெடுங்காலம் நிலைத்திருத்தல்
34. ஆடாபூதி - ஏமாற்றுக்காரன்

[ இ ]
35. இரண்டும் கெட்டான் - நன்மை தீமை அறியாதவன்
36. இலை மறை காய் - வெளிப்படாது மறைந்திருத்தல்
37. இளிச்சவாயன் - எளிதில் ஏமாறுபவன்
38. இட்டுக்கட்டுதல் - இல்லாததை சொல்லுதல்
39. இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல்
40. இரண்டு தோணியில் கால் வைத்தல் - ஒரே நேரங்களில் இரு செயல்களில் ஈடுபடல்

[ ஈ ]
41.  ஈரல் கருகுதல் - வேதனை மிகுதல்
42.  ஈவிரக்கம் - கருணை
43.  ஈயோட்டுதல் - தொழிலெதுவுமின்றி இருத்தல்
44. ஈடேறுதல் - உயர்வடைதல்

[ உ ]
45. உள்ளங்கையில் நெல்லிக்கனி - வெளிப்படையாக தெரிதல்
46. உதவாக்கரை - பயனற்றவன்
47. உப்பில்லாப் பேச்சு - பயனற்ற பேச்சு
48. உச்சி குளிர்தல் - மிக்க மகிழ்ச்சி அடைதல்
49. உருக்குலைதல் - தன்னிலையிலிருந்து மாறுபடல்
50. உலை வைத்தல் - பிறருக்கு அழிவு வருவித்தல்

உடல் உறுப்புகள் பற்றிய மரபுத்தொடர்கள்

1.
அடி பற்றிய மரபுத்தொடர்கள்

01. அடியொற்றுதல் - பின்பற்றுதல்

02. அடிநகர்தல் - இடம்பெயர்தல்

03. அடிபணிதல் - கீழ்ப்படிதல்

04. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச்செய்தல்

05. அடியிடுதல் - ஆரம்பித்தல்

2.
கண் பற்றிய மரபுத்தொடர்கள்

01. கண் வைத்தல் - விருப்பம் கொள்ளுதல்

02. கண்வளர்தல் - நித்திரை செய்தல்

03. கண்ணெறிதல் - கடைக்கண்ணால் பார்த்தல்

04. கண்கலத்தல் - ஒருவரை ஒருவர் விரும்புதல்

05. கண்மூடுதல் - இறத்தல்

06. கண் திறத்தல் - அறிவுண்டாதல்

3.
கழுத்து பற்றிய மரபுத்தொடர்கள்

01. கழுத்துக்கொடுத்தல் - பிறர் துன்பத்தில் உதவுதல்

02. கழுத்தறுத்தல் - நம்பிக்கை துரோகம் செய்தல்

03. கழுத்திற்கட்டுதல் - வலிந்து திணித்தல்

04. கழுத்தைக்கட்டுதல் - விடாமல் நெருக்குதல்

4.
காது பற்றிய மரபுத்தொடர்கள்

01. காது கொடுத்தல் - அவதானித்தல்

02. காது குத்துதல் - ஏமாற்றுதல்

03. காதில் ஓதுதல் - கோள் சொல்லுதல்

04. காதைக்கடித்தல் - இரகசியம் கூறல்

5.
கால் பற்றிய மரபுத்தொடர்கள்

01. கால் பின்னுதல் - தடைப்படல்

02. கால் பிடித்தல் - காலைப் பற்றிக் கெஞ்சுதல்

03. கால் கொள்ளுதல் - ஆரம்பித்தல்

04. காலைச்சுற்றுதல் - பற்றித் தொடர்தல், தொடர்ந்து பற்றுதல்

05. காலாறுதல் - ஓய்ந்திருத்தல்

06. கால் ஊன்றுதல் - நிலை பெறுதல்

07. காலில் விழுதல் - மன்னிப்பு கேட்டல்

6.
வயிறு பற்றிய மரபுத் தொடர்கள்

01. வயிற்றை கட்டுதல் - செலவைச் சுருக்குதல்

02. வயிற்றிலடித்தல் - சீவனத்தை கெடுத்தல்

03. வயிறு வளர்த்தல் - எவ்வாறோ பிழைத்து கொள்ளுதல்

04. வயிறு கிள்ளுதல்,வயிறு கடித்தல் - பசியுண்டாகுதல்

05. வயிறு குளிர்தல் - திருப்தி அடைதல்

06. வயிறு எரிதல் - பொறாமை கொள்ளுதல்

7.
வாய் பற்றிய மரபுத்தொடர்கள்

01. வாய் விடுதல் - வெளிப்படையாக கேட்டல்

02. வாய் புலம்பல் - பிதற்றுதல்

03. வாய் திறத்தல் - பேசத்தொடங்குதல்

04. வாய்ப்பூட்டுப் போடுதல் - பேசாது தடுத்தல்

05. வாயில் மண் போடுதல் - கேடு விளைவித்தல்

8.
கை பற்றிய மரபுத்தொடர்கள்

01. கை கழுவுதல் - முற்றாய் விலகல்

02. கை கூடல் - அனுகூலமாதல்

03. கையிடல் - ஆரம்பித்தல்

04. கை நீட்டுதல் - அடித்தல்

05. கைபிசைதல் - செய்வதறியாது திகைத்தல்

06. கை தளர்தல் - வறுமையாதல்

07. கை கொடுத்தல் - உதவி செய்தல்

08. கை மிகுதல் - அளவு கடத்தல்

09. கைகலப்பு - சண்டை

10. கையளித்தல் - ஒப்படைத்தல்

9.
செவி பற்றிய மரபுத்தொடர்கள்

01. செவி கொடுத்தல் - கவனித்து கேட்டல்

02. செவிக்கேறுதல் - கேட்பதற்கு இனிமையாக இருத்தல்

10.
தலை பற்றிய மரபுத்தொடர்கள்

01. தலைகாட்டுதல் - வெளிவருதல்

02. தலை கீழாய் நடத்தல் - முறை தவறி நடத்தல்

03. தலைக்கொழுப்பு - தான் என்ற அகந்தை

04. தலைப்பாரம் - தான் என்ற அகந்தை

05. தலை வீக்கம் - தான் என்ற அகந்தை

06. தலைக்கணம் - தான் என்ற அகந்தை

07. தலைகீழாய் நிற்றல் - பிடிவாதம் பிடித்தல்

08. தலைப்படுதல் - மேற்கொள்ளுதல்

09. தலைமறைவு - ஒளிந்திருத்தல்

11.
தோள் பற்றிய மரபுத்தொடர்கள்

01. தோளிலிருந்து செவிகடித்தல் - ஆதரிப்பவரை வஞ்சித்தல்

02. தோள் மாற்றுதல் - பிறர் சுமையை தான் சுமத்தல்

03. தோள் கொடுத்தல் - உதவி செய்தல்

12.
நா பற்றிய மரபுத்தொடர்கள்

01. நாக்கு வளைத்தல் - பழித்தல்

02. நாக்கு நீழுதல் - அடக்கமின்றி பேசுதல்

03. நாக்கு விழுதல் - பேச நாவெழாமல் போதல்

04. நாக்கடைத்தல் - பேச முடியாது இருத்தல்

05. நாக்குத்தவறுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்

06. நாக்குப் புரளுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்

07. நாக்குத்தப்பல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்

13.
பல் பற்றிய மரபுத்தொடர்கள்
01. பல் இழித்தல் - பல்லைக்காட்டி கெஞ்சுதல் , ஏளனம் செய்தல்

02. பல்லைக்கடித்தல் - துன்பம் தருவதை சகித்து கொள்ளல்

03. பல்லைப் பிடுங்குதல் - சக்தியை அடக்குதல்

பள்ளியில் print எடுத்து பராமரிக்கவேண்டியவை User Name & Password

பள்ளியில் print எடுத்து பராமரிக்கவேண்டியவை User Name & Password


பள்ளியில் print எடுத்து பராமரிக்கவேண்டியவை User Name & Password

*1.பள்ளியின் பெயர்:*

*2.ஒன்றிய பெயர்:*

*3.மாவட்டம்:*


*4.School EMIS NO:*

*5.TN EMIS*
*User ID:*
*Password:*

*6.Minority Scholarship*
*User ID:*
*Password:*

*7.BAS Attendance*
*User ID:*
*Password:*

*8.All Teachers Bio-Metric Attendance*
*User ID:*
*Password:*

*9.Inspire Award*
*User ID:*
*Password:*

*10.Teachers EMIS Login*
*User ID:*
*Password:*

*11.School E-mail*
*User ID:*
*Password:*

*12.MDM* 
*Noon Meal SMS NO:*

*13.BEO CELL NO:*

*14.CRC CO-ORDINETOR CELL NO:*

*15.BRT CELL NO:*

*16.SMC PRESIDENT CELL NO:*

*17.SCHOOL SMC BANK Account NO:*

*18.BEO OFFICE E-MAIL ID:*

ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

டான்செட் நுழைவுத்தேர்வு எப்போது?

டான்செட் நுழைவுத்தேர்வு எப்போது?


பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ச.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு தொடர்ந்து நடக்க உள்ளது, பனிரெண்டு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் உயர்நிலைப் பள்ளி மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு  அறை கண்காணிப்பாளராகவும், பறக்கும்படையிலும், துறை அலுவலர்களாகவும் தலைமையாசிரியர்களை தேர்வு நடத்தும் முதன்மை அலுவலர்களாகவும் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்களை அலுவலக பணிக்கு ஈடுபடுத்துவார்கள்.

அதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு பணிகளில் ஈடுப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டு ஏமிஸ் ( EMIS )என்ற டேட்டா என்ட்ரி மூலம் அனைத்து வகை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பெயர் பட்டியலை எடுத்து தேர்வு பணிக்கு பயன்படுத்த அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இன்று விடுவிப்பு செய்து தேர்வுப்பணி கூட்டத்திற்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் அந்தந்த பள்ளி இணைய முகவரிக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத 3 மணி 15 நிமிடம் அதாவது 3 மணி நேரம் தேர்வு எழுதவும், 15 நிமிடம் வினாத் தாளை படித்து பார்க்க நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பணியாளர்கள் காலை 8.00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையில், தொடர்ந்து 4 மணி முதல் 5 மணிவரை நின்று பணியாற்ற வேண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் அதாவது புற்றுநோய், இருதய பிரச்சனை காச நோயளிகள் பெருமளவில் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்கள், கர்ப்பமுற்றவர்கள் நீண்டநேரம் நின்று பணி செய்யமுடியாது.

அவர்களை தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சா. அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு - பிப்ரவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link

குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு - பிப்ரவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர பொறுப்பேற்ற நிறுவனம் போதிய பயிற்சி அளிக்காமல் போனதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்தது.




அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் சம்பளப் பட்டியல் தயாரிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கான பயிற்சியை கருவூல ஊழியர்களுக்கு அளிக்கவில்லை.
இதனால் சம்பளப் பட்டியல் தயாரிக்க முடியாமல் கருவூல ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெற முடியாமல் தற்போது தவிக்கின்ற நிலை ஏற்பட்டது.
தற்போது இக்குறைகள் நிவர்த்தி செய்பட்டு உரிய நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive