உடல்நிலை சரியில்லாத நிலையிலும் Nishta பயிற்சியில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தியது காரணமாக ஆசிரியை மரணம் .
இரங்கல் செய்தி
வேலூர் கல்வி மாவட்டம் சார்பில் வேலூரில்
01.11.2019 வியாழக்கிழமை முதல் தொடங்கிய இரண்டாம் கட்ட
NISTHA பயிற்சியில்
கலந்து கொண்ட அணைக்கட்டு ஒன்றியம், ஏரிப்புதூர் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை
எஸ்.ஜகத் ஜனனி அவர்கள் முதல் நாள்
உடல்நிலை சரியில்லை என்று சொன்னபோது மருத்துவமனைக்கு செல்ல
அனுமதிக்காமல்
பார்வைக்கு யாராவது அதிகாரிகள் வந்தால் யார் பதில் சொல்வது,
என்று கூறி இங்கேயே ஓய்வு எடுங்கள்
என்று
அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் பயிற்சி மைய நிர்வாகிகள்.
மீண்டும் அதே பயிற்சியில் வெள்ளிக்கிழமையும் உடல்நிலை சரியில்லை என்று சொன்ன பிறகுதான் அனுப்பியுள்ளனர்.
அதுவும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து அவருடைய கணவரை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த மன உளைச்சல் தாங்காமல் மறுநாள்(03.11.19) காலை அந்த ஆசிரியை மரணமடைந்துவிட்டார்.
இது முழுக்க முழுக்க அந்தப் பயிற்சி மைய நிர்வாகிகளின் அலட்சியமான சர்வாதிகாரமான போக்குதான் இந்த ஆசிரியரின் மரணத்திற்கு முழு காரணம்.
உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு உடனடி தேவை ஓய்வா இல்லை உடனடி சிகிச்சையா என்று கூட தெரியாத இந்த நிர்வாகம் தான் அந்த ஆசிரியரின் இழப்பிற்கு முழு பொறுப்பு.
முதல் நாளே சிகிச்சைக்கு அனுப்பி இருந்தால் அவரது குடும்பம் இன்று நடுத்தெருவில் நின்று இருக்காது. அவரது மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் இன்று தாயை இழந்து தவிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து பயிற்சி மையங்களிலும்
உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று சர்வாதிகாரமாக, சிறைக் கைதிகளைப் போல ஆசிரியர்களை நடத்தி செயல்படுகின்றனர் பயிற்சி மைய நிர்வாகிகள்.
திருமதி.ஜகத் ஜனனி ஆசிரியையின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
மேலும் திருமதி.ஜகத் ஜனனி மரணத்திற்கு காரணமான பயிற்சி மைய நிர்வாகிகள் அனைவரின் மீதும் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
_குறிப்பு: திருமதி.ஜகத் ஜனனி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு நாளை NISHTA பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை (Badge) அணிந்து கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .
அமர்நாத்
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
வேலூர்.
0 Comments:
Post a Comment