DIKSHA App - ஒரு பார்வை
*_DIKSHA_*
*⚡மேலே சொன்ன பெயரில் Google Playstoreல் ஒரு ஆப் இருக்கிறது*
_அதை பற்றி உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரியாத மற்றவர்களுக்கான பதிவு இது_
*⚡இந்த ஆப் சென்ற வருடம் ஜூலை மாதம் நமது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒன்று.*
*⚡இன்று உதயா பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டு வந்தான், நான் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலே ஆகிறது. அப்போது அவனது பாட புத்தகத்தை வாங்கி பார்த்த போது*
*⚡அந்த சமசீர் பாட புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதன் ஒவ்வொரு செக்ஷனிலும் ஒரு QR CODE (சதுரமாக கொசகொச என்று ஒரு படம் இருக்குமே அது தான்) இருப்பதை எதேச்சையாக, கவனித்தேன்*
*⚡அது என்னடா என்று, செல்போனில் அதனை ஸ்கேன் செய்து பார்த்தால் அது DIKSHA என்று ஒரு ஆப் பதிவிறக்கம் செய்ய சொல்லியது, அதை போனில் இன்ஸ்டால் செய்த பிறகு மீண்டும் அந்த QR CODE ஸ்கேன் செய்தால் அந்த பாடத்தில் அந்த பிரிவில் உள்ள பாடத்தை தெள்ளதெளிவாக தமிழில் ஒரு வீடியோ ஓடியது*
*⚡உதாரணமாக, நான் பார்த்த முதல் வீடியோ சூரிய குடும்பத்தை பற்றியது, நல்ல தமிழில் கமலி மற்றும் ஷாலினி என்ற இருவர் சூரிய குடும்பத்தை சுற்றி வந்து ஒவ்வொரு கோளை பற்றியும் அறிந்து கொள்ளும் 2 நிமிட விடீயோ ஓடியது,*
*⚡மறுபடியும் உதயாவின் வேறு புத்தகங்களை வாங்கி வேறு பல QR CODEகளை ஸ்கேன் செய்து பார்த்தால் அந்த அந்த பாடத்தின் அந்த அந்த பிரிவுகளை பற்றி அத்தனை அருமையான வீடியோக்கள், எதுவும் 2 நிமிடத்துக்கு மேலே கிடையாது, அத்தனை இரத்தின சுருக்கம்*
*⚡இந்த ஆப் மொத்த இந்தியாவின் எல்லா மாநில பாடதிட்டத்துக்கும், CBSE பாடதிட்டத்துக்கும் உண்டு என்று அதில் போடப்பட்டிருந்தது, நான் நமது சமசீர் கல்வி திட்டத்திலுள்ள ஆறாம் வகுப்பு பாடத்தை மட்டுமே சோதனை செய்து பார்த்தேன்*
*⚡மிக மிக அருமையான ஆப், இரண்டு வீடியோகளை பார்த்த உதயா உடனே அம்மாவின் போனில் அதை இன்ஸ்டால் செய்து கொண்டான், ஏதாவது ஒரு போனில் நான் படிக்கும் நேரத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்றான்*
*⚡எனக்கு தெரிந்து இந்த திட்டம் எப்போது தொடங்கப்பட்டது என்றெல்லாம் தெரியாது, ஆனால் சென்ற ஆண்டு தான் ஆப் புழக்கத்தில் வந்துள்ளது. BYJU என்று ஒரு ஆப் பல கோடி ரூபாய் செலவில் தொலைக்காட்சி முதல் செய்தித்தாள் வரை விளம்பரம் செய்யப்படுகிறது, அந்த ஆப் பயன்படுத்த, மாதம் ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம் செலுத்த வேண்டும்*
*⚡ஆனாலும் அவர்களது ஆப் அவர்களின் வசதிக்கேற்ப அவர்கள் விரும்பும் பாடங்களை நடத்துவார்கள் ஆனால் இந்த DIKSHA ஆப் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் புத்தகத்தில் உள்ள அந்த அந்த குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விளக்கத்தை தெளிவாக வீடியோ மூலம் விளக்குகிறது இவ்வளவு பயனுள்ள ஒரு ஆப் பற்றி எதனால், ஒரு வருடம் ஆகியும் இன்னமும் வெளியே விளம்பரம் செய்யாமல் இருக்கிறது என்று தெரியவில்லை*
*⚡அது என்ன காரணமாக வேண்டுமானலும் இருக்கட்டும்,*
*⚡உங்கள் பிள்ளைகள், உங்களுக்கு தெரிந்தவர் வீட்டு பிள்ளைகள், என்று எல்லோருக்கும் இதை சொல்லுங்கள்.*
_நண்பர்கள் இதை ஷேர் செய்ய வேண்டாம்,_
*⚡அப்படியே காப்பி செய்து உங்கள் சொந்த பதிவாக போடுங்கள் அப்போது தான் உங்கள் நண்பர்கள் தவறாமல் படிப்பார்கள்*
_DIKSHA ஆப்-இன் லிங்க் இதோ_
https://play.google.com/store/apps/details?id=in.gov.diksha.app&hl=en_IN
*⚡இந்த ஆப் இன்ஸ்டால் செய்யும் பொது மாணவர் என்றும், தமிழ் மொழி என்றும், தெரிவு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள், இந்த ஆப்-ல் ஆசிரியர்களுக்கு என்றும் ஒரு வெர்ஷன் இருக்கிறது*
0 Comments:
Post a Comment