இசை பாடத்துக்கு ஆசிரியர் நியமனம்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 74 காலியிடங்களுக்கு, இசை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் இசைஆசிரியர்களுக்கு, விருப்ப இட மாறுதல் கவுன்சிலிங், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட்டது. 'ஆன்லைன்' வழியே, காலியிடங்கள் கண்டறியப்பட்டு, விருப்பமான ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது. பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 74 இசை ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நியமனம், கவுன்சிலிங் வழியாக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளி கல்விஇயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment