தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தேனி-சில்லமரத்துப்பட்டி அரசுப்பள்ளி மாணவி சுவாதி தேர்வு
தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி
அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி சுவாதி தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.*
கிராமத்துப் அரசுப்பள்ளியில் வறுமையின் விளிம்பில் தாய் அரவணைப்புடன் தொடர் முயற்சியில் தினமும் அதிகாலை 4.00 மணிக்கு சில்லமரத்துப்பட்டி கிராமத்திலிருந்து தேனிக்கு 5 ஆண்டுகளாக யாருடன் உதவியில்லாமல் தினக்கூலிக்கு செல்லும் அவருடைய அன்னையின் ஊக்கத்தாலும், தன்னம்பிக்கையோடும் தினசரி பயிற்சி பெற்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்று தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் தந்தையில்லாமல் தினக்கூலி வேலை செய்யும் தாயின் உந்துதலால் மட்டுமே சாதனை புரிந்த ஒரு கிராமத்து மாணவிக்கு பாராட்டுக்கள்...
இவரின் வெற்றிக்கு உருதுணையாக இருந்த இவரின் தாய் *அழகுதாய்* அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
*சாதிப்பதற்கு பொருளாதாரம் தடையில்லை தன்னம்பிக்கை தொடர்முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் என்று நிருபித்து அரசுப்பள்ளிக்கும், சில்லமரத்துப்பட்டி கிராமத்துக்கும் , தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த சுவாதிக்கு வாழ்த்துக்கள்* ..
*குறிப்பு* : தேசிய அளவில் நீச்சல் போட்டியில் பங்கேற்க எனது முகநூலில் பதிவிட்டதை பார்த்து தானக முன்வந்து *பொருளதவி செய்த* *சில்வை உறவுகள்* குழுவிற்கும் நன்றிகள்...
*அ.சின்னராஜ்* ஆசிரியர்
அ.மே.நி.பள்ளி
சில்லமரத்துப்பட்டி
தேனி
0 Comments:
Post a Comment