வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 30.09.2019 நிலவரப்படி பதிவு செய் தோரின் எண்ணிக்கை!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 30.09.2019 நிலவரப்படி பதிவு செய் தோரின் எண்ணிக்கை!


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சம் என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தொழி லாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

 தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி பதிவு செய் தோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 ஆக உள்ளது. அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாண வர்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 827 ஆகவும், 19 முதல் 23 வயதுள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 12 லட்சத்து 34 ஆயிரத்து 513 ஆகவும் உள்ள னர். 24 முதல் 35 வயதுள்ளவர்களில் அரசுப் பணிக்காக 25 லட்சத்து 88 ஆயிரத்து 180 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை முதிர்வு பெற்ற பதி வுதாரர்களாக 11 லட்சத்து 51 ஆயி ரத்து 877 பேரும் உள்ளனர். 58 வய துக்கு மேற்பட்டோர் 7 ஆயிரத்து 681 பேர் என மொத்தம் 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 பேர் மொத்த பதிவுதா ரர்களாக உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள் ளது.

பட்டதாரிகள் அதிகம்: இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் அதிகளவு உள்ளனர். குறிப்பாக, இள நிலை பட்டதாரிகளில் கலைப் படிப்பு கள் படித்தோர் 4.17லட்சமும்,அறிவி யல் படிப்பு படித்தோர் 5.5 லட்சமும், வணிகவியல் படித்தோர் 2.86 லட்ச மும், பொறியியல் படித்தோர் 2.23 லட்சமும் உள்ளனர். பத்தாம் வகுப்பு படித்தோர் 51.46 லட்சமும், பிளஸ் 2 படித்தோர் 31.33 லட்சம் பேரும் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive