TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தேர்வினை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 


முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு வரும் ஜூலை 4-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive