TANCET 2019 RESULT Published
டான்செட் நுழைவுத்தேர்வு முடிவு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக டான்செட் மாணவர் சேர்க்கை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எம்பிஏ படிக்க 21,733 பேரும், எம்சிஏ படிக்க 6,002 பேரும், முதுநிலை இன்ஜினியரிங் படிக்க 14,201 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 22, 23ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 39 மையங்களில் டான்செட் தேர்வு நடந்தது. இந்நிலையில் நுழைவுத்தேர்வு முடிவு www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் இ-மெயில் ஐடி, பாஸ்வேர்டு அளித்து இணையதளத்தில் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்தில் ஜூலை 10ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment