NEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது..! ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..!

NEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது..! ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..!


மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின் இந்த NEFT & RTGS பயன்பாடுகள் பெரிய அளவில் அதிகரித்திருப்பதை ஆர்பிஐயின் அறிக்கைகள் சொல்கின்றன. அந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க NEFT & RTGS போன்ற வெகு ஜன மக்கள் பயன்படுத்தும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கு ஆர்பிஐ வசூலிக்கும் கட்டணத்தை இனி (ஜூலை 01, 2019 முதல்) வசூலிக்கப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. அதோடு ஆர்பிஐ வசூலிக்காத கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காமல், இந்த பயனை மக்களுக்கு சென்றடையும் படி தங்கள் NEFT & RTGS கட்டணங்களைக் குறைக்குமாறும் ஆர்பிஐ அறிவுறுத்தி இருக்கிறது. 

 இரண்டு முறைகள் NEFT தற்போது இந்தியாவில் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு NEFT பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, NEFT பணப் பரிவர்த்தனைகளுக்கு 2.50 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யும் தொகையைப் பொறுத்து கட்டணம் வசூலித்து வந்தன. இனி ஆர்பிஐ இந்த NEFT பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதில்லை என்பதால் கட்டணம் பெரிய அளவில் இன்றில் இருந்தே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive