NEET - பள்ளிக்கல்வித் துறை இயக்கு நர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வரும் 2021-ம் ஆண்டு நடை பெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டித் தேர்வுகளுக்கு நடப்பு கல்வியாண்டில் (2019-20) பிளஸ்-2 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற் சியை புனேயில் உள்ள தக்ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.
இந்தபயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் ஆங்கில வழியில் அறிவியல் பாடப் பிரிவில் படிப்பவராக இருக்க வேண்டும். 10-ம்வகுப்பு தேர் வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண் டும். புனேவில் உள்ள தக்ஷனா நிறுவனத்தில் ஓராண்டு தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் இலவசம்.
மாணவர் களின் பெற்றோரிடம் இருந்து விருப்பக் கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியர் பெற வேண் டும். தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரு பள்ளிக்கு 10 மாணவர் கள் வீதம் தேர்வு செய்து அதன் பட்டியலை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த பயிற்சிக்கு டிசம்பர் 8-ல் தக்ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதி யாக தேர்வு செய்யப்படுவர்.







0 Comments:
Post a Comment