உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினியை தொடுதிரை போல இயக்க mobile application

உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினியை தொடுதிரை போல இயக்க mobile application



தினம் ஒரு கற்றல் கற்பித்தல் செயலி- mobile application
வகுப்பறையில் மட்டும் அல்ல எங்கிருந்தும் உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினிய தொடுதிரை போல இயக்க வேண்டுமா அல்லது உங்கள் கணினியில் இருந்து உங்கள் கைபேசியை இயக்க வேண்டுமா அதற்கான ஒரு எளிமையான கற்றல் செயலி தான் ANY DESK என்ற செயலி. இதன் மூலம் எளிமையாக உங்கள் கணினியை கைபேசியில் இணைத்து உங்கள் கைபேசியில் இருந்து உங்கள் கணினியை இயக்க முடியும். 

முதலில் இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பின் கணினியில் இந்த அப்ளிகேசனின் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த சாப்ட்வேரின் லிங்க் இந்த அப்ளிகேசனிலே உள்ளது. பின் கணினியில் அந்த சாப்ட்வேரை ஓபன் செய்து அதில் வரும் எண்ணை உங்கள் கைபேசியில் உள்ள இந்த செயலியில் பதிவிட்ட உடன் உங்கள் கணினி திரை உங்கள் கைபேசியில் தோன்றும். அதன் பிறகு நமக்கு எது வேண்டுமோ அதை டச் செய்தால் போதும் கணினியில் அது ஓபன் ஆகும். இது டீம் வீவரை விட எளிமையானது.
இதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.anydesk.anydeskandroid

கணினியில் இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்

https://anydesk.com/download

ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive