Flash News : ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லாத பள்ளிகள் நூலகங்களாகவும், அப்பள்ளி ஆசிரியர்கள் நூலகர்களாகவும் மாற்றப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

Flash News : ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லாத பள்ளிகள் நூலகங்களாகவும், அப்பள்ளி ஆசிரியர்கள் நூலகர்களாகவும் மாற்றப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை நூலகங்களாக மாற்றப்படும்

தமிழகத்தில் 1,248 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னையின் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு 15 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளும் இணையதள வசதிகளுடன் கணினி மயமாக்கப்படும். 

தமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர். அதில் 45 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதற்காக இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. அதே இடத்தில் நூலகங்களாக மாற்றப்படும். பள்ளி ஆசிரியர்களே நூலகர்களாகவே செயல்படுவார்கள். அதற்க்கான பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive