இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை பி.டி. உஷாவிற்கு மூத்த வீராங்கனை விருது!
Senior Hero Award For PT Usha
இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான திகழ்ந்தவர் பி.டி. உஷா. இவர் தடகள ராணி என அழைக்கப்படுபவர். 55 வயதாகும் இவர், கடந்த 1985-ம் ஆண்டு ஜகர்த்தா நகரில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடையோட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் தொடரோட்டம் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கம் வென்றார்.
இது தவிர வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். கத்தார் நாட்டின் தோஹா நகரில் வருகிற செப்டம்பர் 24-ந்தேதி சர்வதேச தடகள கூட்டமைப்பின் (ஐ.ஏ.ஏ.எப்.) 52-வது தொடக்க கூட்டம் நடைபெறுகிறது.
இதில் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி உஷாவுக்கு அந்த அமைப்பின் சி.இ.ஓ. ஜோன் ரிட்ஜியன் அழைப்பு விடுத்துள்ளார். சிறந்த பணியாற்றியமைக்காக ஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த வீராங்கனை விருதுக்கு உங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்து உள்ளார். இந்த கவுரவத்திற்கு டுவிட்டரில் பி.டி. உஷா நன்றி தெரிவித்து கொண்டார்








0 Comments:
Post a Comment