நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை ஏற்பாடு

நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை ஏற்பாடு


பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

செங்கல்வராய நாயக்கர் சிறப்பு பயிற்சி மையம் சார்பில், 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. இப்பயிற்சி ஒவ் வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். ஏப்ரல் மாதம் முழு வதும் நடத்தப்படும்.

இதுதொடர் பாக இலவசஅறிமுக வகுப்பு ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பி.டி.லீ.செங்கல் வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். முன்பதிவு அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் நீட் தேர்வுக் குப் பயிற்சி அளிப்பார்கள். இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்கள் 86680-38347 என்ற செல்போன் எண்ணில் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காலையில் நேரில் வந்தும் முன்பதிவுசெய்யலாம்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive