கண்கள் கலங்க செய்யும் பார்வையற்ற சிறுமியின் செயல்
கண்கள் கலங்க செய்யும் சிறுமியின் செயல்... கவுதமாலாவில் பார்வையற்ற சிறுமி தன்னைப் போன்றே பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ள சக சிறுமிக்கு அவர்களின் பிரத்யேகத் தடியைப் பயன்படுத்தி நடப்பது எப்படி? எனக் கற்றுத் தரும் காட்சிகள் காண்போரையும் உருகச் செய்கிறது. மிக்ஸ்கோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டளை உள்ளது.
அங்கு வேலன்டினா, மியா ஆகிய இரு சிறுமிகளும் உள்ளனர். இருவரும் தோழிகள். இருவரும் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன்டினா என்ற சிறுமி, தனது தோழி மியாவுக்கு பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரத்யேக தடியைப் பயன்படுத்தி எப்படி எங்கும் இடித்துக் கொள்ளாமல் லாவகமாக நடப்பது எனக் கற்றுத் தருகிறார். சிறுமிகளின் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
இந்த காட்சிகளை பார்ப்பவர்கள் கண்கள் கலங்கி விடுகிறது.








0 Comments:
Post a Comment