வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் .மற்றும் பாலாடைக்கட்டி…..உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்

வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் .மற்றும் பாலாடைக்கட்டி…..உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்





முன்பெல்லாம் பாலில் கலப்படம் என்றால் அது அதிக தண்ணீர் ஊற்றுவது அல்லது மாவு பொருட்களை கலப்பது என கேள்வி பட்டிருப்போம் . ஆனால் சமீபத்தில் பிடிபட்டுள்ள போலி பால் நிறுவனம் குறித்த செய்தி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவலாக  இருக்கிறது. 

மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த  மூன்று  பால் தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறையினரால்  சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அந்த அசோதனையின் முடிவில் அங்கு தயாரிக்கப்படுவது போலி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் என தெரியவந்ததை அடுத்து   57பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஒரு லிட்டர் பாலில் 30 சதவீதம் மட்டும் பால் சேர்த்து. அதனுடன் வெள்ளை நிற பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்,குளுக்கோஸ் தூள், மற்றும் திரவ சோப்பு  ஆகியவற்றைக் கலந்து பால் தயாரிக்கப்படுவதாகவும், மற்ற பால் சார்ந்த பொருட்கள் தயாரிக்கவும் இதே முறையை பயன்படுத்தியதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

அதோடு இந்த போலி பால் பாக்கெட்டுகளில் பிரபல பால் நிறுவனங்களின் சீல் குத்தப்பட்டு இந்தியாவில் உள்ள முக்கிய சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யதது  தெரியவந்துள்ளது. இந்த தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive