வழக்குகளை கவனிக்க தனி அதிகாரி நியமனம்

வழக்குகளை கவனிக்க தனி அதிகாரி நியமனம்

உயர் நீதிமன்ற வழக்குகளை கவனிக்க,

பள்ளி கல்விதுறையில், புதிய சட்ட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் நியமனம், பதவி உயர்வு, பண பலன்கள், ஓய்வூதியம்,இடமாறுதல், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை கவனிக்க, ஊழியர்களுக்கு சரியான சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை என, கூறப்பட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள வழக்குகளுக்கு, உரிய சட்ட ஆலோசனை மற்றும் உதவி வழங்க, தனிசட்ட அதிகாரி, சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும், இவரிடம் சட்ட ஆலோசனை பெற, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive