புதுமை ஆசிரியர் விருது பெற்ற 5 அரசுப் பள்ளி ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.




புதுக்கோட்டை,ஜீலை.24:
புதுமை ஆசிரியர் விருது பெற்ற 5 அரசுப் பள்ளி ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சமுதாயத்தில் மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் கல்வி முன்னேற்றத்துக்காக கற்பித்தலில் முதலீடு இல்லாமல் புதுமையான முயற்சிகளை ஆசிரியர்களிடம் ஊக்குவிக்க மாநிலம் முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சமகர சிகஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியும் இணைந்து கடந்த ஆண்டு பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் பங்கு பெற்று சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு புத்தாக்கங்களை சமர்ப்பித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5  ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில் ஜூலை 10-ம் தேதி புதுமை ஆசிரியர் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.எனவே
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து புதுமை ஆசிரியர் விருது பெற்று வந்த கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.ரவி, கம்மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை சி.மைதிலி, துஞ்சனூர் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் எ.செல்வராஜ், உருவம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் முனியசாமி, செட்டிக்காடு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சி.லீமா ரோசிலிண்ட்,மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் அழைத்துப் பாராட்டினார்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive