10ம் வகுப்பு நாளை 'மார்க் ஷீட்'
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண்சான்றிதழ், நாளை வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, நாளை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பள்ளிகள் வழியாக தேர்வு எழுதியமாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில்சான்றிதழை பெறலாம்.தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளிகளில், மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இந்த தகவலை, தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்டுஉள்ளது.
0 Comments:
Post a Comment