குரூப் 1 மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 1.1.2019 அறிவிப்பின்படி, குரூப் 1 பதவிக்கான முதன்மைத்தேர்வு வருகின்ற 12, 13, 14 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.comஎன்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment