ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பணி நீடிப்பு உண்டு

ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பணி நீடிப்பு உண்டு

அவசர நடவடிக்கைக்காக.
******************************

ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு

பெற்றவர்களுக்கு பணி நீடிப்பு உண்டுதொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவிப்பு.

தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் அ.கருப்பசாமி அவர்களை இன்று (30.06.2019) மாலையில் இயக்ககத்தில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும் மாநிலப் பொருளாளரும் சந்தித்து பணி நீடிப்பு குறித்து தெளிவுபடுத்த கேட்டுக் கொண்டார்கள். தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) ஆனந்தி அவர்களும், தொடக்க கல்வி இணை இயக்குனர் (தனியார் பள்ளி) பாஸ்கர சேதுபதி அவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். சில மாவட்டங்களில் திருச்சி, சேலம், தஞ்சாவூர், தேனி போன்ற மாவட்டங்களில் அரசாணை எண் 261ஐ 20 12 2018 ன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பதால் பணி நீடிப்பு இல்லை என அவர்களை 30.06.2019 உடன் விடுவித்து விட்டார்கள். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் அந்த அரசாணையில் அப்படி அறுதியிட்டு சொல்ல வில்லை என விளக்கத்துடன் எடுத்துரைத்தார். பிறகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆய்விற்கு பின் பணிநிறைவு பெறுபவர் பள்ளியில்  உபரி பணியிடம் இருந்தாலும் அந்த வருவாய் மாவட்ட அளவில் உபரி பணியிடங்களையும், காலிப் பணியிடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்த மாவட்டத்திற்குள் பணி நிறைவு செய்வதற்கு வாய்ப்பு இருப்பின் பணி நீடிப்பு வழங்கலாம். மாநிலத்தில் 4 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் பணி நீடிப்பு வழங்கலாம்.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமும், லால்குடி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடமும் இந்த விளக்கத்தை அளித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நீடிப்பு வழங்கலாம் என தெரிவித்தார்கள். அதேபோல் சேலம் மாவட்டத்திற்கும் இந்த குறிப்பாணை வழங்கப்பட்டது. இதற்கு மேல் எந்த மாவட்டத்திலாவது பணி நீடிப்பு மறுத்தால் அந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் நேரில் சென்று நாளை ஒன்றாம் தேதி பணி நீடிப்பு ஆணையினை பெறுங்கள். மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களையும் உடனே சந்தித்து விளக்கத்தை தாருங்கள். மெத்த அவசரப் பணியாக கருதி பொறுப்பாளர்கள் பணி நீடிப்பு பெறுவதற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் அரசாணையை தெளிவாகப் படித்து பத்து மாதம் அவர்கள் பணியாற்றும் வாய்ப்பினை அளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி நீடிப்பை வழங்குவதற்கு எவ்வித தயக்கமும் காட்டத் தேவையில்லை என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டார கல்வி அலுவலர்களுடைய எண்ணத்தையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.

அவசர நடவடிக்கையாக கருதி செயல்பட வேண்டுமாய் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*

அத்தி வரதர் வைபவத்திற்கு இணைய வழி முன்பதிவு (online booking) தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் அதிகார பூர்வ அறிவிப்பு.

அத்தி வரதர் வைபவத்திற்கு இணைய வழி முன்பதிவு (online booking) தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் அதிகார பூர்வ அறிவிப்பு.



10th/SSLC Social New Study Material ( New Books Based )

10th/SSLC  Social New Study Material ( New Books Based )

PG Asst Vacant List - 2019 ( District Wise )



PG Asst Vacant List - 2019 ( District Wise )

PG Asst Vacant List - 2019 ( District Wise )

Dindigul PG Asst Vacant List - Download Here


Tanjore PG Asst Vacant List - Download Here


BT Asst ( Deployment Post ) List - District Wise

BT Asst ( Deployment Post ) List - District Wise

BT Asst ( Deployment Post ) List - District Wise

Dharmapuri District - Surplus BT Post List - Download Here


Vellore District - Surplus BT Post List - Download Here


தொழில்நுட்ப கோளாறால் PGTRB தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம்

தொழில்நுட்ப கோளாறால் PGTRB தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம்

தற்போதைய சிக்கல்

Educational qualifications ல் UG and PG பகுதிகளில் முதன்மைப்பாடம் தேர்வு செய்வதற்கான options கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் BEd கல்வித்தகுதியை பூர்த்தி செய்கின்ற இடத்தில் முதன்மை பாடம் தேர்வு செய்யும் options கொடுக்கப்படவில்லை

இவ்வாறு இருக்கையில் விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்தபிறகு  Preview பார்க்கும்போது B.Ed கல்வித்தகுதியில் முதன்மைபாடம்  என்ற பகுதி Blank ஆக வருகிறது ..

அதாவதுB.Ed முதன்மைப்பாடம் நிரப்பப்படாததை போல அப்பகுதி வெறும் Blank ஆக வருகிறது

விண்ணப்பிக்கையில் முதன்மை பாடம் தேர்வு செய்யும் option B.Ed
பகுதியில் கொடுக்கப்படடாத நிலையில்  விண்ணப்பதாரர்கள் முதன்மை பாடத்தை தேர்வு செய்யாததை போல application ஆனது preview ல் தெரிவதால் விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

PERIYAR UNIVERSITY- Applications are invited for admission into three year B.Ed. Programme (Part-Time)

PERIYAR UNIVERSITY- Applications are invited for admission into three year B.Ed. Programme (Part-Time)


Eligibility:-
1. Upper Primary and Secondary School Teachers who are in service on
full time basis (Govt/Govt Aided/Private).

2. UG/PG [OC-50%, BC-45%, MBC-43%, and SC/ST- 40%.] in the
relevant subject. [Applicants with Commerce and Economics majors
need PG Degree. UG Degree in Engineering will also be considered for
admission].

3. Issue of Application 01-07-2019

4. Last date for submission of filled in Application: 15-08-2019

5. Application and Prospectus can be downloaded from the
website.
www.periyaruniversity.ac.in.
REGISTRAR i/c
B.Ed.
 (Part-Time)-2019-2022

Click here and download

ஜீலை 2019 மாத பள்ளிநாட்காட்டி

ஜீலை 2019 மாத பள்ளிநாட்காட்டி

👉🏼BEO அலுவலக குறைதீர்நாள் 07.07.19

👉🏼RL - இல்லை

👉🏼ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு

தொடக்கக்கல்வி துறை

*2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல்,  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை*

1. *21.06.2019 முதல்*
*28.06.2019 வரை*-
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்

2. *08.07.2019 முற்பகல்*
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள்

3. *08.07.2019 பிற்பகல்*
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்

4. *09.07.2019 முற்பகல்*
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

5. *09.07.2019 பிற்பகல்*
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

6. *10.07.2019 முற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்

7. *10.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்

8. *11.07.2019 முற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்

9. *11.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

10. *11.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்

11. *12.07.2019 முற்பகல்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

12.  *12.07.2019 பிற்பகல்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

13. *13.07.2019 முற்பகல்*
 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்

14. *13.07.2019 பிற்பகல்*
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்தில்

15. *14.07.2019 முற்பகல்*
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்

16. *14.07.2019 பிற்பகல்*
 இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்

17. *15.07.2019 முற்பகல்*
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்

18. *15.07.2019 முற்பகல்*
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.

👉🏼கல்வி வளர்ச்சி நாள் - 15.07.19

👉🏼ஜீலை 2 வது வாரத்திற்கு புதிய பாடத்திட்ட பயிற்சி எதிர்ப்பார்க்க படுகிறது

👉🏼சனிக்கிழமை வேலைநாள் ஏதும் இல்லை

👉🏼இம்மாத வேலைநாட்கள் : 23

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையை தவிர கூடுதலாக பள்ளி வாகனங்களில் ஏற்றி செல்லகூடாது என்பதற்கான பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையை தவிர கூடுதலாக பள்ளி வாகனங்களில் ஏற்றி செல்லகூடாது என்பதற்கான பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின்  
எண்ணிக்கையை தவிர கூடுதலாக பள்ளி வாகனங்களில் ஏற்றி செல்லகூடாது என்பதற்கான  பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை 


தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு

தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு




மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது.

தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது.

இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று தான் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி கூட்டமாக வசிக்கும் இநத் பட்டாம்பூச்சி ஒரு சில இடங்களில் மட்டுமே வசித்து வருகிறது. கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும். இந்த பட்டாம்பூச்சி அடர் பழுப்பு நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை கொண்டவை ஆகும். இந்த தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு அர்த்தம் போர் வீரன் என்பதாகும்.

இது தொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழக வனத்துறைமற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சிக்கு தமிழக அரசு சின்னம் அந்தஸ்து வழஙக அரசாணை வெளியிட்டுள்ளது-

இந்திய அளவில் பட்டாம்பூச்சிக்கு மாநில அளவிலான அங்கீகரிக்கும் 5வது மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா(ப்ளூ மோர்மன்), உத்தரகாண்ட்(காமன் பீகாக்), கர்நாடகா(சதர்ன் பேர்டு விங்ஸ்), கேரளா(மலபார் பேண்டட் பீகாக்) ஆகிய மாநிலங்கள் பட்டாம்பூச்சிகளுக்கு மாநில அந்தஸ்து வழங்கி உள்ளன.

பாலிடெக்னிக் பாடத்திட்டம் மாறுகிறது

பாலிடெக்னிக் பாடத்திட்டம் மாறுகிறது

சென்னை:பாலிடெக்னிக் கல்லுாரிகளில்

நடத்தப்படும், 'டிப்ளமா'இன்ஜினியரிங் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.அதைத்தொடர்ந்து, பாலிடெக்னிக்குகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பிற்கான பாடத்திட்டத்தை மாற்றவும், உயர் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டிலும், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்

.தற்போது, பள்ளி கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு பாடத்திட்டம் மாறியுள்ளதால், முதற்கட்டமாக, பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இது, 2020 - 21ம் கல்வி ஆண்டில், அமலுக்கு வரும்.இரண்டாம் ஆண்டு, டிப்ளமா மாணவர்களுக்கு, 2021 - 22ம் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்.'நடப்பு கல்வி ஆண்டில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாடத்திட்டமே தொடரும்' என, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 19.07.1999க்கு பின்னரும் 01.07.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதி: 

ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவலுக்கு இணையதள அறிவிப்பை பார்க்கவும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:www.airmenselection.cdac.in ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_7_1920b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

இனி பிஸ்கட் கிடையாது... பாதாம், முந்திரி மட்டும் தான்- மத்திய அரசின் அதிரடி திட்டம்...

இனி பிஸ்கட் கிடையாது... பாதாம், முந்திரி மட்டும் தான்- மத்திய அரசின் அதிரடி திட்டம்...


மத்திய அரசின் அலுவல் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் இனி பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிஸ்கட் ஆரோக்கியமற்றது என்பதால் பிஸ்கட் வழங்குவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கடலை, பாதாம், அக்ரூட், முந்திரி போன்ற ஆரோக்கியமான சிறுதீனி வகைகளையே வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இரட்டைத்தேர்வு முறை அமலுக்கு வந்தால் எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: அதிகாரிகள் கருத்து

இரட்டைத்தேர்வு முறை அமலுக்கு வந்தால் எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: அதிகாரிகள் கருத்து

1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழகத்தில்

மருத்துவம்/ இன்ஜினியரிங் படிக்க தமிழ்நாடு புரோபெசன் கோர்சஸ் என்டரன்ஸ் எக்சாமினேசன் (டிஎன்பிசிஇஇ) என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. அதில் 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பிளஸ்2வில் குறிப்பிட்ட 3 பாடங்களில் எடுத்த மதிப்பெண்ணில் 4ல் 3 பங்கும், டிஎன்பிசிஇஇ தேர்வில் எடுத்த மதிப்ெபண்ணில் 4ல் ஒரு பங்கும் சேர்த்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இது 1993ம் ஆண்டுக்கு பின் பிளஸ் 2வில் குறிப்பிட்ட 3 பாடங்களில் மதிப்பெண்ணில் 3ல் 2 பங்கும், டிஎன்பிசிஇஇ நுழைவுத்தேர்வில் 2ல் ஒரு பங்கு மதிப்ெபண்ணை கூட்டி கட்ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

2006ம் ஆண்டு முதல் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வை நடத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2007-16ம் ஆண்டுகளில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்தனர். 2017ம் ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கமானது. அதனால் 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பின்பற்றப்பட்ட இரட்டை தேர்வு நடைமுறை அமலுக்கு வரும்பட்சத்தில், எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

என்ன காரணம்?
ஒரே பாடத்திட்டத்தில் இரு முறை தேர்வு நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு தேர்வை சரிவர எழுதாமல் விட்ட மாணவர், புரிந்து படித்திருந்தால் மற்றொரு தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. அதனால் எம்பிபிஎஸ் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது மாநில பாடத்திட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது. அதனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களை விட கூடுதல் மதிப்பெண் பெற்று அரசுக்கல்லூரி எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்து விடுகின்றனர்.

ஜெப்ரானிக்ஸ் தனது தனித்துவமான ஒயர்லெஸ் இயர்ஃபோனான 'ஜெப்-சிம்பொனி' அறிமுகம்

ஜெப்ரானிக்ஸ் தனது தனித்துவமான ஒயர்லெஸ் இயர்ஃபோனான 'ஜெப்-சிம்பொனி' அறிமுகம்

ஜெப்ரானிக்ஸ் தனது தனித்துவமான ஒயர்லெஸ் இயர்ஃபோனான 13 மணி நேரம் பிளேபேக் நேரத்துடன்* கூடிய 'ஜெப்-சிம்பொனி' யை அறிமுகம் செய்கிறது. ஒயர்லெஸ் கழுத்துப் பட்டை, ஒரு கச்சிதமாகப் பொருந்துகின்ற காதுக்கு-உள்ளே பொருத்தும் வகை இயர்ஃபோன்களுடன் வருகிறது, மேலும் அது மிகச்சிறந்த ஒலிப் பெருக்கத்துடன், சுற்றுப்புற இரைச்சலையும் குறைக்க உதவுகிறது. 

இயர்ஃபோன்கள், அவை எவ்வாறு தோற்றமளிக்கின்றன, உணரப்படுகின்றன, மற்றும் ஒலி அளிக்கின்றன என்பதைப் பொறுத்து அமையும், ஒரு தனிப்பட்ட விருப்பமாகும். ஒரு ஒயர்லெஸ் இயர்ஃபோனை ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால், அதன் காரணம், அவர் ஒரு முட்டுக்கட்டையான அனுபவத்தில் இருந்து விலகி இருக்க மட்டும் அல்லாமல், கைகளின் உபயோகம் இல்லாமல் அவரின் இசையை அனுபவிக்க விரும்புவதும் தான். 

இதில் இன்னொரு விஷயம், ஒரு நீண்ட பேட்டரி ஆயுளைக் கொடுப்பதாகும், ஜெப்-சிம்பொனி அதைத் தான் செய்கிறது. ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் ஐ.டி சாதனங்கள், ஒலி அமைப்புகள், கைப்பேசி/ வாழ்க்கைமுறை பொருட்கள், மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனையில் முன்னணி நிறுவனம், தனது ஒயர்லெஸ் சாதனங்கள் வரிசையில், குரல்வழி உதவி, மற்றும் 13 மணி நேர இசை ஒலிக்கும் திறனுடன் கூடிய ஜெப்-சிம்பொனி என அழைக்கப்படும், தனது தனித்துவமான இயர்போனை அறிமுகம் செய்திருக்கிறது. 

ஒரு அதிகபட்ச சௌகரியமான வடிவத்தை இலக்காகக் கொண்டு, இந்த ஒயர்லெஸ் இயர்ஃபோன்கள், மிகச்சிறந்த நெகிழ்த்திறன் கொண்ட கட்டமைப்புடன், போதுமான ஆதரவை அளிக்கின்ற ஒரு கழுத்துப்பட்டையுடன் வருகிறது. கழுத்துப்பட்டை மூலப்பொருளானது இலகுவான எடை கொண்டது, மேற்புறத்தில் மென்மையானது, மற்றும் ஸ்பிளாஷ் புரூஃப் கொண்டது. ஜெப் சிம்பொனி, ஒரு இரட்டை ஜோடி அம்சத்தினைத் கொண்டிருக்கிறது, மற்றும் கழுத்துப்பட்டையில் மீடியா, ஒலி அளவுக்கான கட்டுப்பாட்டு பொத்தான்களும், 

மற்றும் கூகுள் மற்றும் சிரி சாதனங்களுக்கு குரல்வழி உதவியையும் கொண்டிருக்கிறது. இந்த ஒயர்லெஸ் இயர்ஃபோன், கூகுள்/சிரி சாதனங்களுக்கு குரல்வழி உதவி வசதியையும் வழங்குகிறது, எனவே உங்கள் வேட்கையைத் துரத்துங்கள், கேள்விகளைக் கேட்டு, பயணத்தின் போதே அவற்றுக்கான பதிலையும் பெறுங்கள். இன்னும் அதிக பயனருக்கு-எளிமை அனுபவத்தை வழங்குவதற்காக இந்த இயர்ஃபோன், சிக்கல் இல்லாத ஒரு அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் காந்த சக்தியுள்ள காது பட்டைகளுடன் வருகிறது, 

மேலும் இதில், பட்டை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதைக் குறிக்கும் ஒரு முழுமையான பேட்டரி இண்டிகேட்டர் உடன் வருகிறது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதீப் தோஷி, இயக்குனர், ஜெப்ரானிக்ஸ் கூறுகையில், 'இவை அனைத்தும் பயனாளர்கள் எதிர்நோக்கக் கூடிய ஒரு அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதைப் பற்றியது தான், அது, ஒரு தொந்தரவு-இல்லாத அனுபவத்துக்காக காந்தத் தன்மையுள்ள காது பட்டைகளை வழங்குவது, 

குரல்-வழி உதவிக்காக ஒரு பொத்தானைக் கொண்டிருப்பது போன்ற சிறிய விஷயங்களாக இருந்தாலும், அவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக பயனருக்கு-எளிமை அனுபவத்தை அவர்களுக்கு அளித்து. அவர்களின் ஓய்வு நேரத்தை சரியான முறையில் அனுபவிக்க வைக்கின்றன.' ஜெப் சிம்பொனி இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.

கடும் வெயில் காரணமாக டெல்லி மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!

கடும் வெயில் காரணமாக டெல்லி மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!

கடும் வெயில் காரணமாக டெல்லி மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை; ஜூலை 8-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

Share this

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்பு..

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்பு..


புதுக்கோட்டை,ஜீன்.30: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இரா.வனஜா 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி  முதல் பணிபுரிந்து வந்தார். தற்போது 58 வயது பூர்த்தி அடைந்து  விட்டதால் ஜீன் 30 ஆம் தேதி ஒய்வு பெற்றார்.

எனவே புதியதாக கூடுதல் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி அவர்களிடம் புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பொறுப்பை ஒப்படைத்தார்.அவரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக பணிஓய்வு பெறும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜாவிற்கு பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்..பதிலுக்கு அவரும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தியிடம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நிகழ்வின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) இரா.சிவக்குமார் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன்,பள்ளி துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி,ஜெயராமன்,செல்வம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள் ,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி  அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்  அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive