WhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

WhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கூகிள் மெசேஜஸ் RCS கூகிள் நிறுவனத்தின் இந்த புதிய மெசேஜிங் பயன்பாட்டில், கூகிள் நிறுவனம், வாட்சஅப் பயன்பாட்டில் உள்ளது போன்ற சில அம்சங்களையும் வழங்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கூகிளின் இந்த புதிய முயற்சி நிச்சயம் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக மையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயன்பாடு பல Android சாதனங்களில் முன்பே நிறுவப்பட்டுள்ளது. 

இந்த புதிய அம்சத்திற்கு கூகிள் RCS என்று பெயரிட்டுள்ளது. RCS என்றால் என்ன? RCS என்பது கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் மிகப்பெரிய அம்சமாகும். 

RCS என்பது ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ் (Rich Communication Services) ஆதரவை குறிக்கிறது. இந்த அம்சம் உங்களை வாட்ஸ்அப் போலவே மல்டிமீடியா மெசேஜ், எச்.டி புகைப்படங்கள், வீடியோக்கள், GIF-கள் மற்றும் தேவையான டாக்குமெண்ட் பைல்-களையும் நீங்கள் அனுப்பலாம். 

இந்த புதிய RCS அம்சம் தற்போது லிமிட்டட் ஆபரேட்டர்களை ஆதரிக்கிறது. வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் இருந்தால் போதும் பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் பிரிட்டனைத் தொடர்ந்து, இந்தியா, இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூகிளின் இந்த RCS மெசேஜ் ஆதரவு பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. 

கூகிள் நிறுவனம் தற்பொழுது இந்த புதிய சேவையை வைஃபை அல்லது டேட்டா நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் பயன்படுத்தக் கிடைக்கும்படி விரிவுபடுத்தி வருகிறது. வாட்ஸ்அப் போல, பயனர் டடைப்பிங் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரீட் நோட்டிபிகேஷன் அனைத்தும் இதில் உள்ளது. 
iMessage போன்ற இமோஜி ரியாக்ஷன் இந்த பயன்பாட்டிற்கான புதிய ஈமோஜி ரியாக்ஷன்களை கூகிள் சோதித்து வருகிறது. இந்த அம்சம் வந்த பிறகு, நீங்கள் மெசேஜ்ஜை நீண்ட நேரம் அழுத்தி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ரியாக்ஷனை தேர்வு செய்யலாம். பேஸ்புக் மெஸ்சேன்ஜர் பயன்பாட்டில் உள்ளது போன்றே, பயனரின் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி தம்ஸ் அப், தம்ஸ் டவுன், கோபம், சிரிப்பு போன்ற ஈமோஜிகள் வழங்கப்பட்டுள்ளது.

Google Messages RCS App Launches Competition For WhatsApp! Do you know what's special?

Google Messages RCS Google's new messaging app has revealed that Google is going to offer some features, such as the use of the WatchApp.

This new initiative by Google is definitely expected to be a huge challenge for WhatsApp. This application is already installed on many Android devices.

Google has named this new feature RCS. What is RCS? RCS is one of the biggest features Google has introduced.

RCS stands for Rich Communication Services. This feature lets you send multimedia messages, HD photos, videos, GIFs, and required document files like WhatsApp.

This new RCS feature is currently supported by limited operators. Google's RCS message support is available in India, Italy and Singapore, followed by France, Mexico and the UK, although there is a Wi-Fi or data network.

Google is currently expanding this new service to make it available for all to use via Wi-Fi or Data Network. Like WhatsApp, it includes user daid notification, message read notification.

Emoji Reaction like iMessage Google has been testing new emoji reactions for this app. After this feature, you can press the message for a long time and choose the Reaction according to your choice. Just like in the Facebook Messenger app, emojis have been provided for a long time by pressing the user's message, such as thumbs up, thumbs down, anger and laughter.


தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்புகள் 2020

தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 - TNUSRB Tamil Nadu Police Recruitment Notification Updates 2020

நீட், ஜேஇஇ: விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி

நீட், ஜேஇஇ: விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி

நீட், ஜேஇஇ நுழைவுத்தோவுகளுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டு நடைபெறவிருந்த நீட், ஜேஇஇ நுழைவுத் தோவுகள், ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத்தோவு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வழங்கிய கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
எனவே, மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்வதுடன், தோவு மையத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேசிய தோவுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு - போக்குவரத்துக்கு அனுமதி - மேலும் பல தளர்வுகள் - முழு விவரம்

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு - போக்குவரத்துக்கு அனுமதி - மேலும் பல தளர்வுகள் - முழு விவரம்
  
* சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு
* தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
* ஐ.டி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
* 20 சதவீத ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும்
* வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் திறக்க அனுமதி
* குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

டீக்கடை, உணவகங்களில் 8ம் தேதி முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி
* நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்
* உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
* 5 பேருக்கு மேல் ஒரு கடையில் கூடக் கூடாது
பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி?

* நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடக்கம்

* சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது

* 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்

* ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்

* பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை

* பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிப்பு



* கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி
* தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி...

* விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி...
* நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை...
* திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிறவிருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
*  மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் , பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.


* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு,கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இ-பாஸ் முறை :

* அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

* வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்  கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செடீநுயும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கவேண்டும்.


* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

* எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

*  டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்  இன்றி பயன்படுத்தலாம்.

* ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப்பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!



கரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இது குழந்தைகளின் கல்வியில் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைத்த நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் பலர் அரசுப் பள்ளிகளைத் தேடி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வகுப்பு வரையில் 67 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் கூடுதலாக 10 சதவீதம் வரை மாணவ சேர்க்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மாணவர் சேர்க்கையை தற்போது நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளை நாடி வரும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர் கழகத் தலைவர்கள் சிலருடன் உரையாடினோம்.

தகுதியான ஆசிரியரும் ஆங்கில வழிக் கல்வியும்!

"ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு வலியுறுத்தி இருந்தாலும் பல தனியார் பள்ளிகள் பெற்றோரைத் துரத்தித் துரத்தி கட்டண வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்கும் யோசனைக்கு வந்திருக்கிறார்கள். நிச்சயமாக பொதுக் கல்வி முறைதான் நன்மை பயக்கும். அதை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முழு தகுதி வாய்ந்தவர்கள் என்பதை பொதுமக்கள் கவனத்துக்கு இத்தருணத்தில் கொண்டு வர விரும்புகிறோம். அதேபோல அரசுப் பள்ளிகள் அனைத்தும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழிக் கல்வியை கற்பித்து வருகின்றன. இந்த நேரத்தில் அரசிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தற்போது கூடுதலாக மாணவர்கள் சேரும் சூழல் கனிந்திருப்பதால் இந்தப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரேனும் நியமிக்கப்பட வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ்.

பலப்படுத்த வேண்டிய நேரம்

"அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அதே நேரத்தில் இந்தத் தருணத்தில் நம்முடைய பள்ளிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சராசரியாக அரசுப் பள்ளி வகுப்பறைகள் 440 சதுர அடி கொண்டவை. மாணவர் ஒருவருக்கு 10 சதுர அடி என்று வைத்துக் கொண்டால் 40 மாணவர்களுக்கு 400 சதுர அடி அவசியமாகிறது. மீதமுள்ள 40 சதுர அடி ஆசிரியருக்கானது. அப்படி இருக்கையில் ஏற்கெனவே பெருவாரியான அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பு 60 முதல் 80 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் முதலில் அதிக எண்ணிக்கையிலான வகுப்பறைகள் தேவைப்படும். இதேபோன்று கூடுதல் எண்ணிக்கையில் மேஜை, இருக்கை, காற்றோட்டமான இடம், தூய்மையான கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டுத் திடல், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பலவற்றை ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது.

ஏற்கெனவே 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில்தான் சராசரியாக இடைநிலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளை விடுத்து அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோர் இந்த விகிதாசரத்தையும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடவே செய்வார்கள். அதுமட்டுமின்றி பாட ஆசிரியர்கள் சிறப்பாக கற்பித்தாலும் குழந்தைகளின் தனித்திறன்களை வளர்க்கும் சூழலும் இன்றைக்கு அத்தியாவசியமாகி இருக்கிறது.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் 1 முதல் 5 வகுப்புவரை ஒரே ஆசிரியரே அத்தனை பாடங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் முழு நேரமாக நியமிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக புதிய மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி அழைத்து வர முடியும்" என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிச்சைக்கனி.

கரோனா காலத்தில்தான் என்றில்லை சாதாரண காலத்தில்கூட தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைக்க நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் கடன் மூட்டையைச் சுமக்க நேர்கிறது. ஸ்மார்ட் வகுப்பறை முதற்கொண்டு பல வசதிகள் அரசுப் பள்ளிக்கூடங்களிலும் இன்று நடைமுறையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே ஏழ்மையின் காரணத்தினால் மட்டுமல்ல தரமான கல்வி வேண்டியும் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் விரைந்து வரும் நாட்கள் தூரத்தில் இல்லை என்ற கருத்தையும் கல்வியாளர்கள் பலர் முன்வைக்கிறார்கள்.

ஜுன் 1 முதல் புதிய வழிமுறைகள் - மத்திய அரசு வெளியிட்டது

ஜுன் 1 முதல் புதிய வழிமுறைகள் - மத்திய அரசு வெளியிட்டது
 
 
நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
நாளையுடன் நான்காவது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் எவையெல்லாம் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
ஜுன் 1 முதல் புதிய வழிமுறைகள் அமலுக்கு வரும். ஜுன் 8 முதல் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜுன் 8 முதல் உணவகங்கள், மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி பயிற்சி நிலையங்கள் மாநில / யூனியன் பிரதேச அரசுகள் உடன் ஆலோசித்த பிறகு திறக்கலாம். நிலைமைக்கு ஏற்றவாறு தியேட்டர்கள், ஜிம், மெட்ரோ ரயில், சர்வதேச விமான சேவை ஆகியவை அனுமதிக்கப்படுவது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவை இன்று பொது வெளியில் நடமாடுவது தற்போது, போல தடை செய்யப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இருக்கும்.

ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு

ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு
நாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் மாநில/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தலாம். இதில் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது பற்றி ஜூலை மாதம் முடிவெடுக்கப்படும்.
பன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
கரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்தப் பகுதிகளில் யாரும் உள்ளே நுழைவதோ, வெளியே வருவதோ அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், கரோனா பரவும் வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, மேலும் கூடுதலான கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு பிறகான கல்வி சூழல் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு!

ஊரடங்கிற்கு பிறகான கல்வி சூழல் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு!

கற்றல் -கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய, அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் கூடுதலாக 4 உறுப்பினர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்குவது? சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா? பாடத்திட்டங்களை குறைக்கலாமா? வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாம்சன் வைத்யன் தலைமையில் 12 பேர் கொண்ட வல்லுநர் குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்தது.

 
இந்நிலையில் இந்த குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை தாக்கல் செய்ய வல்லுநர் குழுவுக்கு ஏற்கனவே 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Unlock 1.0 - புதிய தளர்வுகள் அறிவிப்பு

Unlock 1.0 - புதிய தளர்வுகள் அறிவிப்பு

நாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது.
இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜூலை மாதத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.

கரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.


*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'

*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

*ஜூன் எட்டாம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஷாப்பிங் மால்கள் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.

 *ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

*தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.

*தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

*வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.

*அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி - கல்லூரிகளைத் திறக்கலாம் - ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.

*முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

 *அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.

*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

 *மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

 *சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

*அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

 *கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி.

*தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.

*தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி.

*இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.

*நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்.

*நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது.

*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.

*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.

*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

*மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

*சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

Flash News : மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு.

Flash News : மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு.


மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு.

* ஜூன் 30வரை பள்ளி,  கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை.

100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் அடுத்த 3 மாத கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க திட்டம்.!!!முதல்வர் பழனிச்சாமி உத்தரவு.!!!

100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் அடுத்த 3 மாத கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க திட்டம்.!!!முதல்வர் பழனிச்சாமி உத்தரவு.!!!
100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 35 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் கூலியை வங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்கிறார்கள்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பேருந்துகளும் இயங்காததால் வங்கி சென்று பணம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வங்கி அதிகாரிகள் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். நோய் குறையும் வரை அடுத்த 3 மாதத்திற்கு இதே நடைமுறை தொடரும் என அவர் தெரிவித்தார்.

ரேசன் கார்டு இருந்தால்.கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - செல்லூர் ராஜூ

ரேசன் கார்டு இருந்தால்.கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - செல்லூர் ராஜூ
கொரோன வைரஸால் 20,246 பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 11313 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதியைப் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையை காட்டி ( ரேசன் கார்டு ) ரூ. 50 ஆயிரம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இனி பொது இடங்களில் புகைபிடிதல், எச்சில் உமிழ்ந்தால் சிறைத்தண்டனை..!

இனி பொது இடங்களில் புகைபிடிதல், எச்சில் உமிழ்ந்தால் சிறைத்தண்டனை..!
கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று மாநிலத்தில் பரவுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியில், மகா விகாஸ் அகாடி அரசு பொது இடங்களில் துப்புதல், புகைபிடித்தல் அல்லது மூக்கை சிந்துவது போன்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.... அதில், குற்றவாளிகள் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அனுபவிப்பார்கள். குற்றவாளிகளுக்கு இனிமேல் அபராதம் விதிக்க மாநில பொது சுகாதாரத் துறை தொற்றுநோய் நோய் சட்டம், 1897 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளை கோரியுள்ளது.
பொதுவில் துப்புவது கோவிட் -19 நோய்த்தொற்றை மேலும் பரப்பும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் வழக்குகள் மகாராஷ்டிராவில் இருப்பதால், பொதுவில் துப்புதல் மற்றும் புகைபிடிப்பதை எதிர்த்து கடுமையான சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று மாநில பொது சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.

மக்கள் பொதுவில் துப்புவதை தடை செய்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து துப்புகிறார்கள், மூக்கு ஊதுகிறார்கள், பொதுவில் புகைக்கிறார்கள் என்று அமைச்சர் முன்பு வருத்தம் தெரிவித்திருந்தார். அவர்கள் இப்போது இருக்கும் சட்டங்களின் கீழ் அபராதங்களை ஈர்ப்பார்கள் என்று அமைச்சர் எச்சரித்தார். கோவிட் -19_யை பரப்புவதற்கும் துப்புதல் பங்களிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தடைச் சட்டங்களை இன்னும் கண்டிப்பாக செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். மீண்டும் குற்றவாளிகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள், "என்று டோப் கூறினார்.
மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் துப்புவதை மாநில அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (கோப்டா), 2003-யை தொடர்ந்து, புகைபிடிப்பதை அரசு தடை செய்துள்ளது, மேலும் 2013 ஆம் ஆண்டில் புகையிலை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
மும்பை பொலிஸ் சட்டத்தின் கீழ் விதிகளை பின்பற்றி பொதுவில் துப்புதல் மற்றும் புகைபிடித்த முதல் மூன்று குற்றங்களுக்காக குற்றவாளிகளுக்கு தற்போது ரூ .1,000 முதல் 5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 வெடிப்பைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பஞ்சாப் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு துப்புவதற்கும், முகமூடி அணியாததற்கும் அபராதத்தை ரூ .500 ஆக உயர்த்தியுள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலை மீறிய அபராதத்தை மாநில அரசும் ரூ .2,000 ஆக உயர்த்தியது. முன்னதாக, முகமூடி அணியாததற்கு ரூ .200 அபராதம், பொது இடங்களில் துப்புவதற்கு ரூ .100, வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதற்காக ரூ .500 அபராதம் விதித்தது.

சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
சென்னை: பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் 50 சதவீதம் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளின் எச்எஃப்சி மற்றும் எச்சி ஆகியவை ஜூன் 2020-க்குள்ளாக முடிவடைக்கின்றன.
எனவே 1,775 பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் மாநகரப் போக்குவரத்து பிரிவில் பராமரிப்பு, பழுது நீக்கும் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவில் பணிபுரியுபம் பணியாளர்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 50 சதவீதம் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
பணிக்கு திரும்பும் பணியாளர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், உணவகம், ஓய்வறை, நேரக்காப்பாளர் அறை மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேணடும்.
பணியாளர்களுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வழங்க மருத்துவக் குழு பரிந்துரை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வழங்க மருத்துவக் குழு பரிந்துரை!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில், நிலைமையை பொறுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வு வழங்கலாம் என தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், சென்னையில், சில நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், முதல்வர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நிபுணர்கள் குழுவினர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்தனர். இந்த 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும், பிற மாவட்டங்களில் நிலைமையை பொறுத்து, கூடுதல் தளர்வு அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்தில், கொரோனா இறப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதாகவும், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.

கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பது, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.

இந்தியா" எனும் பெயரை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

"இந்தியா" எனும் பெயரை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இல்லாததால், அந்த மனு நேற்று பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
“அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இந்தியா என்ற பெயர் இன்னும் குறியீடாகவும், சொந்த மக்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது.
ஆனால், இந்தியா எனும் பெயரை மாற்றி பாரத் என்று மாற்றும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போரட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நாம் கடந்துவிட்டோம் என்பதற்கு பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்றுவது அவசியம்.கடந்த 1948-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1 வரைவு குறித்த விவாதம் நடந்தபோது பெரும்பாலானோர் இந்துஸ்தான், அல்லது பாரத் என பெயர் வைக்க வலுவான ஆதரவு இருந்துள்ளது.
எப்படியாகினும் இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாக நகரங்கள் பெயர் மாற்றம் செய்யப்படும்போது, நம் தேசத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான பெயரான பாரத் அல்லது இந்துஸ்தான் பெயரை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது.ஆதலால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்தியா எனும் பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என்று மாற்ற மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்”.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை

கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை

Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 30 ) மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று

Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 30 ) மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 30.05.2020 ) இன்று 938 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்   616 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.05.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :

2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்


2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்..


இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் குறைந்தது 3 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகே திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் படி மேல்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும்,1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செப்டம்பரில் மாதத்திலும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக பள்ளிகள் ஆண்டுக்கு 220 நாட்கள் செயல்படும். கொரோனாப் பரவல் காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் பணிநாட்கள் 100 நாட்களாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத் துறையிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.

ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..?

ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..?

கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் தொகை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்தப்பணத்தை எப்படி பெறுவது..? வழிமுறைகள் என்ன என்கிற விபரமும் வெளியாகி உள்ளது.

மதுரை மாடக்குளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மூளிகை பொடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க.வினரும் நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இதன்மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் 32,965 ரேசன் கடைகள் மூலம் 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களும், நிவாரணத் தொகை ரூ.1000-ம் வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இழந்த பொருளாதார வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் கூட்டுறவு வங்கி சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், நகைக் கடனாக கிராமுக்கு ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 69 பைசா மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. சிறுகுறு வியாபாரிகள் பயனடையும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு ரேசன் கார்டை ஆவணமாக பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 350 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த காலத்தில் தொகையை செலுத்தினாலும் மீண்டும் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழகத்தை போல வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை''என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அறிவித்த ரூ.50000 பணத்தை அந்தந்தப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் குடும்ப அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும், 4,645 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில் 75 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிகபட்சம் கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை தனி நபர் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படி ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொள்ள நிறைய வழிகாட்டுநெறிமுறைகள் உள்ளன. அவற்றை எளிமைப் படுத்தி இந்த 50000 ரூபாயை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை 350 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக் இட் ஈசி - பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!

டேக் இட் ஈசி - பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!

தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று அச்சத்தால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில், தெற்காசிய நாடுகளில் மட்டும் 43 கோடி குழந்தைகள் இடைநிற்றல் அபாயத்தில் இருப்பதாக யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

2 நிமிடத்தைக் கூட ஓரிடத்தில் செலவழிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிறுவர்கள், இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீடுகளில் அடைபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 15-ல் தொடங்குகின்றன. தேர்வை எதிர்கொள்ளும் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுவது இயல்பே. அவர்களுக்குள் ஏற்படும் பதற்றம், உளவியல் சிக்கல்கள், அழுத்தத்தைப் போக்க டேக் இட் ஈசி என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயன் பெற 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.

டேக் இட் ஈசி தேன்மொழி என்ற பெயரில் இனிமையான பெண் குரல், மாணவர்களின் பதற்றம் தணிக்கிறது. தினம் ஒரு கதையாக 30 நாட்களுக்கான கதைகள் தயார் செய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றன. இந்த எண்ணை அழைக்கும் மாணவர்கள் அந்தந்த நாளுக்கான கதையைக் கேட்கலாம். கதை முடிவில் சில கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அவற்றுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.


’என்ன கொடுமை சரவணன் சார்?’, ’போதும் இதோட நிறுத்திக்க!’ என்பன உள்ளிட்ட சினிமா வசனங்களோடு கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தங்கள் வாழ்வியலோடு எளிதில் கதைகளை உள்வாங்க முடியும்.

எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வசதி இருக்காது என்பதால் சாதாரண போன் அழைப்புகளுக்குத் தானியங்கி பதில் அளிக்கும் விதமாக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள் தவிர்த்து, அனைத்துக் குழந்தைகளுமே இந்த டேக் இட் ஈசி கதைகளைக் கேட்டு மகிழலாம்.

Flash News : Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு

Flash News : Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு

*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'*

*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது

*நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி

*நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கு பிறகே பள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

ஜூன் மாதத்திற்கு பிறகே பள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் எம்.டெக், எம்.சி.ஏ மாணவர் சேர்க்கை

இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் எம்.டெக், எம்.சி.ஏ மாணவர் சேர்க்கை




சென்னை: 

விஐடி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் மற்றும் எம்.சி.ஏ படிப்பில் சேருவதற்கு வழக்கமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தாண்டு மேற்கண்ட இரு படிப்புகளுக்கும் இளங்கலை படிப்பில் (UG) பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர்கள் அனைவரும் www.vit.ac.in என்ற இணையதளம் மூலம், வரும் ஜூன் மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் இமெயில் மற்றும் மொபைல் எண்களை தவிர மற்ற தகவல்களை வரும் ஜூன் 20ம் தேதி வரை திருத்தம் செய்யலாம். கேட் தேர்வு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

 கேட் தேர்வு எழுதாத மாணவர்கள், அவர்களுடைய இறுதி தேர்வுக்கு முன் எழுதிய தேர்வு மதிப்பெண் (UG-pre final year / for M.Tech upto 6th sem and for MCA upto 4th sem) அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். 

மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் விஐடியில் நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக 5 வருட இன்டெக்ரேடட் எம்.டெக் மற்றும் எம்.எஸ்.சி படிப்பில் சேரலாம். 

இதில் மாணவர்கள் சேருவதற்கு வரும் ஜூலை 15ம் தேதி கடைசி நாள். இதுவரை 12ம் வகுப்பு தேர்வு முற்றிலும் முடியாததாலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததாலும் இந்த கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.vit.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வளாக கல்வித் தேர்வுகள் மே 2020 உத்தேச அட்டவணை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வளாக கல்வித் தேர்வுகள் மே 2020 உத்தேச அட்டவணை


10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை: அரசு செயலாளர் அவசர கடிதம்

10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை: அரசு செயலாளர் அவசர கடிதம்
சென்னை: 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக, அரசு செயலாளர் மணிவாசன், நீர்வள பிரிவு முதன்மை தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் அரசு கட்டிடங்களை பராமரிப்பது, நீர்வள ஆதாரத் துறையின் கீழ் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்கள் அனைத்தையும் பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்வு அறிவிப்பதா? மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் மீண்டும் ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்வு அறிவிப்பதா? மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் மீண்டும் ஆலோசனை
சென்னை: நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (31ம்தேதி) முடிவடைகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் 5வது கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - வெற்றிக்கான வழிகாட்டி கையேடு.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - வெற்றிக்கான வழிகாட்டி கையேடு.

வணக்கம் ,

வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் தேர்வு பயம் , ஆர்வமின்மை , இந்த கொரோனா நோய் தொற்று பேரிடர் , போன்ற பிரச்சனைகளை கடந்து , ஊரடங்கில் எவ்வாறு கவனத்தோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு மனநலன் சார்ந்த பயனுள்ள கருத்துகளைக் கொண்ட இந்த கையேட்டை தன்னுடைய நேரத்தையும் , சிந்தனையையும் செலவு செய்து மாணவர்கள் நலம் கருதி , நமது தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் மூலம் வெளியிடும் பேராசிரியர் கு.சின்னப்பன் , பதிவாளர் ( பொ ) , தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் அவர்களுக்கும் மற்றும் அவர் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவிற்கும் தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


SSLC Public Exam - Special Winning Guide - Download here...

பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு

பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு

பள்ளி கல்வியில், பாடங்களை குறைக்கலாமா அல்லது பாடத்திட்டத்தையே குறைக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டில், வரும், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லாததால், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு பணிகள் காலதாமதமாவதால், மாணவர்களுக்கு கல்வி சுமையை குறைக்கும் வகையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், பல்வேறு பிரிவு இயக்குனர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆய்வுக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என, ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம்நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர். பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.

பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ.2க்கு ரீசார்ஜ் செய்தால்... பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

ரூ.2க்கு ரீசார்ஜ் செய்தால்... பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

இந்த கொரோனா வைரஸ் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது 

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஎஸ்என்எல் நிர்வாகம் ரூபாய் 19க்கு ஒரு பிளானை அறிமுகப்படுத்தியது

இந்த பிளான்படி ரூபாய் 19க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு வேலிடிட்டி நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிளான் தற்போது ரூபாய் 2க்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதன்படி ரூபாய் 2க்கு ரீசார்ஜ் செய்தால் வேலிடிட்டி காலம் முடிந்த பின்னரும் மூன்று நாட்கள் வரை நீடிப்பு வழங்கப்படும் என்றும் அந்த தொகையை வேலிடிட்டி தொடங்கிய முதல் நாளில் வாடிக்கையாளர்களின் மெயின் பேலன்ஸில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த பிளான் வேலிடிட்டி கால அவகாசம் நீடிப்புக்கு மட்டுமே என்றும் இந்த பிளானில் வேறு எந்த சலுகையும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இனி வாட்ஸ்-ஆப் மூலம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யலாம்.. எப்படி?

இனி வாட்ஸ்-ஆப் மூலம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யலாம்.. எப்படி?

வாட்ஸ்-ஆப் மூலம் சமையல் சிலிண்டர்களை பதிவு செய்வதற்கான புதிய அம்சத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக வாட்ஸ்-ஆப்பில் 1800224344 என்ற எண் வாயிலாக சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.

வாடிக்கையாளருக்கு புக்கிங்கை உறுதிப்படுத்த ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். அத்துடன், கட்டணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பப்படும். 

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யூபிஐ அல்லது இதர டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்தலாம். அதில், எப்போது சிலிண்டர் கிடைக்கும் என்ற ட்ராக்கிங் வசதியும் பாரத் பெட்ரோலி

கல்வித் தொலைக்காட்சியின் நீட் மற்றும் ஜே.இ.இ பயிற்சிக்கான படப்பிடிப்பு.

கல்வித் தொலைக்காட்சியின் நீட் மற்றும் ஜே.இ.இ பயிற்சிக்கான படப்பிடிப்பு.

விருதுநகரில் வியாழக்கிழமை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீட் ,ஜே.இ.இ பயிற்சிக்கான படப்பதிவு தொடங்கியது.

படப்பிடிப்பை விருதுநகர் மாவட்ட கல்வித் தொலைக்காட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர் கோ.ஜெயக்குமார்ஞானராஜ் முன்னிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி பேசுகையில் கூறியதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கிராமப் புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் உயர்கல்வி பயில பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை அரசுப் பள்ளி மாணவர்களும் எளிதாக எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயன்பெற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் இலவச பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக கணிதம்,இயற்பியல் வேதியியல் ,விலங்கியல் ,தாவரவியல்,உயிரியல் ஆகிய பாடங்களில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நுழைவுத் தேர்வு வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு கல்வித் தொலைக்காட்சியில் நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதற்கான படப்பதிவு விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கல்வித் தொலைக் காட்சியில் கண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 29 ) மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று

Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 29 ) மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 29.05.2020 ) இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 20246 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்   618 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -
Teachers Wanted.


Wanted PGT / BT / TGT Teachers
FOR ALL SUBJECTS which includes PET, Yoga, Karate & Silambam Applications are invited from Experienced Teachers of renowned English Medium Schools.

Fluency in Spoken English is a prerequisite. The interested candidates with Qualification or expertise in the relevant flelds/subjects may submit their credentials in person to, THE PRINCIPAL on or before May -31, 2020.

Interview date will be intimated later. SACRED HEART MAT. HR. SEC. SCHOOL No.7, K.V.R NAGAR, NEYVELI-2
For Details: 63692 26336, 63827 78797, sacredheartschooljobs@gmail.com


Recent Posts

Total Pageviews

Code

Blog Archive