01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு!

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம்.

இதன்படி தற்போதைய விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.

4% அகவிலைப்படி உயர்வு உறுதியானால், தற்போது 17% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் 21% அகவிலைப்படி பெறுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கான, வருமான வரிக்கான கணக்கீடுகள் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப் படுவதால், இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் வழங்கப் படும்.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளித்ததும், அதனைப் பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்.

எனினும், அகவிலைப்படி உயர்வு பற்றிய துல்லியமான கணக்கீடு ஜனவரி 31 ஆம் தேதி தான் தெரிய வரும்.



Flash News நாளை நடைபெற இருந்த Nmms தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Flash News நாளை நடைபெற இருந்த Nmms தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது



தொடர் மழையின் காரணமாக

மாணவர் நலன் கருதி 

 நாளை நடைபெற இருந்த NMMs  தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. -தேர்வுத்துறை இயக்குனர் 


10 ம் - வகுப்பு வினாத்தாளில் மாற்றம்!!

10 ம் - வகுப்பு வினாத்தாளில் மாற்றம்!!

எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

இந்த பிஞ்சு காயை அரைத்து தடவினால் சொட்டையிலும் முடி வளரும்!

இந்த பிஞ்சு காயை அரைத்து தடவினால் சொட்டையிலும் முடி வளரும்!



கூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில் உண்டான பாதிப்பையே உணர்த்துகிறது.

முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.

மரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஊமத்தைங்காய் :பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

கருமையான முடி கிடைக்க :அவுரி இலை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் தவிர்க்கப்படாத ஒன்று. இது நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அது கருமையாக மாற்றுவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அவுரி இலை

மருதாணி இலை.

செய்முறை:அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.

நரை முடி மறைய :கரிசலாங்கண்ணி நரை முடியை கருமையாக மாற்றும் அற்புத மூலிகையாகும். அதனை பயன்படுதும் முறையில் பயன்படுத்தினால்தான் அதனுடைய முழுப் பலனும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழச்சாறு.

கரிசலாங்கண்ணிச்சாறு.

பால்.

நல்லெண்ணெய்.

செய்முறை:எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

பொடுகு குறைய :செம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும்.

செம்பருத்தி பூ.

துளசி விதை.

வெட்டிவேர்.

தேங்காய் எண்ணெய்.

செய்முறை:தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

அடர்த்தியாக வளர:பாதாமில் புரதம் இருப்பதால் அவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டும். அதோடு எலுமிச்சை சாறும் கலந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு.

எலுமிச்சைச்சாறு.

செய்முறை:10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்துக் கொள்லுங்கள். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

பொடுகுத் தொல்லைக்கு :படிகாரம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது. கிருமிகளால் உருவாகும் சரும பற்றும் கூந்தல் பாதிப்பௌ குணப்படுத்தும். பூஞ்சைத் தோற்று மற்றும் பொடுகை முழுக்க கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

படிகாரம்

சீயக்காய்

செய்முறை:படிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை வராது

முடி நன்றாக செழித்து வளர :பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.

முடி உதிர்தல் நிற்க :முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.

தேங்காய்ப் பால்.

செய்முறை:வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

கருமையாக முடி வளர :மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய்

பால்

செய்முறை:மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

அடர்த்தியாக வளர

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை.

தயிர்.

செய்முறை:கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு நாள் :மிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

வால் மிளகு.

நல்லெண்ணெய்.

செய்முறை:வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

கூந்தல் நீண்டு வளர:சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

சப்பாத்திக் கள்ளி பூக்கள்

தேங்காய் எண்ணெய்.

செய்முறை:சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம் :வெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.

தேவையானவை :

வெங்காயம்.

செம்பருத்திப்பூ

செய்முறை:வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

மரிக்கொழுந்து :மரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.

பொடுகு மறைய :வேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை:வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்



பருவினால் ஏற்பட்ட குழிகளை நிமிடத்தில் சரி செய்ய வழிகள்

பருவினால் ஏற்பட்ட குழிகளை நிமிடத்தில் சரி செய்ய வழிகள்



சருமத்தில் உள்ள துளைகள் உங்களது முகத்தை அசிங்கமாக வெளிப்படுத்தும். சரும துளைகளை எத்தனை நாட்கள் தான் மெக்கப் போட்டே மறைத்துக் கொண்டு இருப்பீர்கள்…? இந்த சருமத்துளைகளை மிக எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி தீர்க்கலாம்…

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், உங்களுக்கான நல்ல பலனை எளிதாகவும் விரைவாகவும் பெறலாம்… இந்த செயல்முறைகளால் உங்களது முகத்திற்குக் எந்த ஒரு தீமையும் உண்டாகது என்பது குறிப்பிடத்தக்கது.

1. வெள்ளரிக்காய்:வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

2. முட்டை:முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

3. பப்பாளி:பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

4. தக்காளி:உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

5. ஆரஞ்சு தோல்:ஆரஞ்சு தோல் பவுடர் இரண்டு டீஸ்பூன், பால் அல்லது பால் க்ரீம், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஆகியற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு தோல் பவுடரையும் பால் அல்லது பால் க்ரீமையும் கலந்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்களது முகத்தில் பரவலாக மசாஜ் செய்யுங்கள். இதனை 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

6. ஐஸ்கட்டிகள்:ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தில் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள சரும துளைகள் மறைந்து சருமம் சமநிலையை அடையும்.

7. தக்காளி, சர்க்கரை:தக்காளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் சருமத்தில் உள்ள துளைகளை சுருங்க செய்வதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றும். முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த தக்காளியை சருமத்தில் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் மூடப்படும். சருமத்தில் உள்ள துளைகள் படிப்படியாக மறையும்.

8. பேக்கிங் சோடா:பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள பருக்களை சுருங்கச் செய்வதோடு, சருமத்தில் உள்ள துளைகளையும் மூட செய்யும்.. பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை சருமத்தில் 30 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களது சருமம் சென்சிடிவ் சருமம் என்றால் இந்த முறையை தவிர்த்து விடுங்கள்.

9. எலுமிச்சை சாறு:முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் விரிவடைந்த சரும் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

10. அன்னாசி பழம்:இரண்டு டீஸ்பூன் அன்னாசி பழ சாறுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

11. கடலை மாவு:கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

12. பாதாம் பேஸ்ட்:பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

13. தேன் மற்றும் சர்க்கரை:தேன் மற்றும் சர்க்கரை கூட சருமத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க உதவும். அதிலும் தேன் சிறந்த டோனர் மட்டுமின்றி, சருமத்துளைகளை இறுக்கும். அத்தகைய தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.


கடும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலன் தரும் பூண்டு ஆய்வின் முடிவு!

கடும் மூட்டு வலிகளுக்கு நல்ல பலன் தரும் பூண்டு ஆய்வின் முடிவு!


முழங்கால் வலி என்பது மூட்டுக்களில் மிகுந்த வலி மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிதைவு நிலை. இந்த முழங்கால் வழியில் பல வகைகள் உள்ளன என்பதுடன் இதனுடைய கடினத் தன்மை அவதியுறுவோரின் நிலையைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.

மூட்டு வலிகள் உள்ளவர்கள் அனைவருமே முழங்கால் வலி அல்லது ஆர்தரைடிஸ் குறைபாடு உள்ளவர்கள் அல்ல. வலி, எரிச்சல் மற்றும் மூட்டுகள் இறுக்கம் ஆகியவை வயதுமுதிர்ந்த மற்றும் எடை அதிகமாக உள்ளவர்களிடையே பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளாகும்.வலி மற்றும் அசவுகரியம் ஆகியவை மற்ற எந்த மூட்டு வழிகளை போன்றே இதற்கும் உண்டு என்பதோடு உங்களது தினசரி செயல்களை பாதித்து வாழ்க்கையைக் கடினமாக்குகின்றன.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் கடைகளில் கிடைக்கும் இயற்கை சத்து மருந்துகள் தவிர பல இயற்கை மருந்துகள் இந்த மூட்டுவலி அறிகுறிகளை குணப்படுத்த உள்ளன. குறிப்பாக மூலிகைகளும் வாசனைத் திரவியங்களும் பல நூற்றாண்டுகளாக இதுபோன்ற பயமுறுத்தும் வலிகளையும் சுகவீனத்தையும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

எனவே இன்று இதுபோன்ற வலியை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்கள் பட்டியலை தொகுத்து வழங்குகிறோம். ஒவ்வொரு நபரையும் பொறுத்து இந்த மூலிகை மருந்தின் அளவுகள் மாறுபடும்.

அதனால்தான் இந்த மருந்து அல்லது மூலிகைகளை ஆகாரத்துடன் சேர்க்கும் முன் ஒரு உணவியல் வல்லுனரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இதை மனதில் வைத்து பழம்பெரும் சிகிச்சை முறைகள், மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு மூட்டு மற்றும் முழங்கால் வழிகளை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

1. மஞ்சள்

பரவலாக மருந்தாகவும் அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் இந்த மூலிகை புண்களை ஆற்றும் இயல்புகளை கொண்டுள்ளதால் இது மூட்டுவலி மட்டுமல்லாது பொதுவான வலிகளுக்கும் மருந்தாக அமைந்துள்ளது. இதை பாலுடன் கலந்தோ அல்லது வேறு விதமாகவோ அருந்தலாம்.

2. பூண்டு

பூண்டு மூட்டுவலிக்கு பழங்காலம் தொட்டே மருந்தாக இருந்து வருகிறது. மூட்டு மற்றும் கடும் முழங்கால் வலிகளுக்கு நல்ல பலன் தருவதாக உறுதிசெய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

3. அதிமதுரம்

இந்த மூலிகை அதன் சக்திவாய்ந்த நறுமணத்திற்கு பெயர்போனது. அதே நேரம் இதில் வலி குறைக்கும் பல்வேறு உட்பொருட்கள் நிறைந்து காணப்படுவதுடன் மூட்டு மற்றும் முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணம் தருகிறது. அதனால்தான் பல ஆயிரம் வருடங்களாக இந்த மூலிகை மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

4. இஞ்சி

இஞ்சி நாம் அனைவரும் அறிந்ததை போல் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு அருமருந்தாக உள்ளது. இதில் மூட்டு மற்றும் முழங்கால் வலிகளுக்கும் பொருந்தும். இதில் உள்ள எரிச்சல் மற்றும் வலித் தடுப்பு உட்பொருட்கள் இஞ்சியை ஒரு சிறந்த மருந்தாக ஆக்குகின்றது.

5. க்ரீன் டீ

ஒரு கப் க்ரீன் டீ மூட்டு வலியின் தீவிரத்தைக் குறையச் செய்து ஆறுதல் அளிக்கக் கூடியது. ஆர்தரைடிஸ் குறைபாடால் அவதியுறும் பெரும்பாலான மக்கள் க்ரீன் டீயை தங்கள் உணவில் சேர்த்து பயன்பெற்று வருகிறார்கள்.

6. மிளகு

ஆர்தரைடிஸ் குறைபாடுள்ள பலர் மிளகை உபயோகித்து மூட்டுச் சிதைவு நிலையிலிருந்து ஆறுதல் பெறுகின்றனர். உணவில் மிளகாய் சேர்ப்பதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் எரிச்சல் கட்டுப்படுத்தப்படும்.

7. இலவங்கப் பட்டை

இந்த நறுமணத் திரவியம் தொற்றுக்களிலிருந்தும் கிருமிகளிடமிருந்தும் பாதுக்காப்பு அளிக்கும் குணங்களைப் பெற்றுள்ளது. இந்த பண்புகள் மூட்டு வலிக்கும் முழங்கால் வலிக்கும் சிறப்பான மருந்தாக உள்ளது.

8. பெருங்காஞ்சொறி (ஸ்டிஞ்சிங் நெட்டில்)

இது மூட்டுவலியை குறைக்கும் இயற்கை மூலிகைகளில் ஒன்று. இது மூக்கை துளைக்கும் நெடியுடன் காணப்படும். இந்த இல்லை கொண்டு டீ தயார் செய்து அருந்தினால் மூட்டுகளில் ஏற்படும் இருக்கும் வழியும் குறையும்.

9. வில்லோ பட்டை

வில்லோ மரப்பட்டை உலகின் மிகவும் பழமையான வலி நிவாரணி. இயற்கை ஆஸ்பிரின் என்றும் இதனை அழைப்பர். பெரும்பாலானோர் இதன் பட்டையை மென்று மூட்டு வலியையும் எரிச்சலையும் குறைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.

10. பிரிஞ்சி அல்லது புண்ணை இல்லை

பே லீப் எனப்படும் இந்த மசாலா இலை அதன் நறுமணத்திற்குப் பெயர் போனது. இது பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. இதைத் தவிர மூட்டுவலி மற்றும் முழங்கால் வலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் இது பயன்படுத்தப் படுகின்றது


ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா?

ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா?

`பல வகைகளில் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் சரிவர வருவதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.’

எல்லா நாடுகளுமே மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உலக வங்கி மற்றும் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்குவது வழக்கம்தான். கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கடன் நிலை ஆய்வறிக்கையை அலசினோம். 


இந்தியா இதுவரை எவ்வளவு கடன் வாங்கியுள்ளது..?

2010-11-ம் நிதியாண்டு முதல் இந்தியாவின் கடன் நிலை பற்றிய ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையின் 8-வது பதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் பதிப்பில் இந்தியாவின் கடன் குறித்து தகவல் கிடைக்கிறது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு 82,03,253 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 51.7% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில், ஐ.நா சபை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது?

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய்.

மேலும், இந்த ஆய்வறிக்கைகளிலிருக்கும் சில தகவல்களைப் பார்ப்போம்... 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 54,90,763 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 82,03,253 கோடியாக உயர்ந்துள்ளது.



Recent Posts

Total Pageviews

Code

Blog Archive